பெங்களூரு சர்வதேச விமான நிலையம், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்(Kempe Gowda International Airport) என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகும், இது பெங்களூரு நகர மையத்திலிருந்து வடக்கே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஏசியா இந்தியா (AirAsia India), அலையன்ஸ் ஏர்(Alliance Air) மற்றும் இண்டிகோ(IndiGo) ஆகியவற்றின் மையமாக செயல்படுகிறது. மேலும் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றின் மையமாக உள்ளது. பெங்களூருக்கு சேவை செய்யும் அசல் விமான நிலையம் எச்.ஏ.எல் விமான நிலையமாகும். இது நகர மையத்திலிருந்து 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இத்தகைய அம்சங்களை கொண்ட பெங்களூரு விமான நிலையம் சென்னையிலும், ஹைதராபாத்திலும் உள்ள விமான நிலையங்களை ஒப்பிடும்போது ஏற்கனவே அதிக செலவான ஒன்றாகவே உள்ளது. விமான பயண செலவுகள் மட்டுமல்லாமல், விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளிலும் பயணிகளுக்கு கூடுதல் செலவாகும். இதன் முக்கிய காரணம், விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம்.
இந்நிலையில், மத்திய அரசு பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்லும் சதஹள்ளி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 2 நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இது பெங்களூருவில் தினசரி வாகன ஓட்டுநர்கள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டண உயர்வு:இணையத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய கட்டண உயர்வு பல்வேறு வகை வாகனங்களுக்கு பொருந்தும்.எடை குறைந்த வாகனங்கள் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்காக தற்போது ரூ.120 வசூலிக்கப்படும், இது முன்பு ரூ.115 ஆக இருந்தது. அதே நேரத்தில், 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்னதாக ரூ.170 ஆக இருந்தது. இந்த கட்டண உயர்வு, தினசரி பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் செலவாக மாறியுள்ளது.
எடை குறைந்த வாகனங்கள்(Lightweight vehicles): எடை குறைந்த வர்த்தக வாகனங்களுக்கு, அதாவது சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ்களுக்கு, சுங்கச்சாவடி கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் தற்போது ரூ.185 ஆக உயர்ந்துள்ளது. இது முன்னதாக ரூ.175 இருந்தது. 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.275 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.265 மட்டுமே இருந்தது. இந்த கட்டண உயர்வு, இந்த வகை வாகனங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும், தினசரி பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் அதிக செலவுக்கு உள்ளாக்கியுள்ளது.
பேருந்துகள் மற்றும் லாரிகள்: பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கான சுங்கச்சாவடி கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் தற்போது ரூ.370 ஆக உயர்ந்துள்ளது. இது முன்பு ரூ.355 இருந்தது. 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.535 மட்டுமே இருந்தது. இந்த கட்டண உயர்வு, பொதுவாக பெரிய வாகனங்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு மற்றும் சாலைப் பயணிகளை அதிக செலவுக்கு உள்ளாக்கியுள்ளது.
கனரக மோட்டார் வாகனங்கள்(Heavy motor vehicles):கனரக மோட்டார் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு, ஒரு வழிப் பயணம் ரூ.560 ஆகவும், திரும்பும் பயணம் ரூ.840 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழு அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு, ஒரு வழிப் பயணம் ரூ.725 ஆகவும், திரும்பும் பயணம் ரூ.1,090 ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லோடுகளை(Logistics Load) ஏற்றுவிடும் நிறுவனங்களுக்கு அதிக செலவுக்கு உள்ளாக்கியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன் ஓட்டிகளின் எதிர்ப்பு: இந்த கட்டண உயர்வு குறித்து பெங்களூருவில் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பெங்களூருவில் போக்குவரத்து செலவுகள் அதிகம். மெட்ரோ, பேருந்து, தனியார் டாக்ஸிகள் என எந்த போக்குவரத்து முறையையும் எடுத்துக் கொண்டாலும் பயணிகள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இப்பொழுது இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு மேலும் பொதுமக்களின் செலவுகளை அதிகரிக்கிறது. தினசரி விமான பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. விமான நிலையத்திற்கு கேப் மற்றும் ஆட்டோவில் செல்லும் பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. சுங்கச்சாவடியில் செலுத்தும் கூடுதல் கட்டணம், உணவுப் பொருட்கள், வர்த்தக பொருட்கள் போன்றவற்றின் விலையையும் பாதிக்கும்.
வாகன ஓட்டுநர்கள் & அதிகாரிகள் கூறுவது:வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது, "நாங்கள் ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்போது சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துவிட்டது. எங்கள் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரிக்கின்றன. மேலும், இந்த கட்டண உயர்வு அவசியம். விமான நிலைய சாலை பராமரிப்பிற்கும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இது தேவையான ஒன்று என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் விளக்கம்: மத்திய அரசு மற்றும் சாலை நிர்வாகத்தினர் இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்தும் வகையில் சில காரணங்களை முன்வைத்துள்ளனர். சாலை பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன, இதனால் கூடுதல் வருமானம் தேவைப்படுகிறது. விரைவில் மெட்ரோ விரிவாக்கம் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. பெரிய வாகனங்கள் அதிகமாகச் செல்கின்றன. இதனால் சாலை சேதமடைகிறது.
விமான நிலையத்திற்கான புதிய போக்குவரத்து திட்டங்கள்:பெங்களூரு விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விரைவில் மெட்ரோ சேவை தொடங்க உள்ளது. இது குறைந்த கட்டணத்தில் விமான நிலையத்தை அடைய உதவும். பெங்களூரு மெட்ரோ விரைவில் விமான நிலையத்துடன் இணைக்கப்படும். அதிக கட்டண வசூலிக்கின்ற கேப் சேவைகளை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த கட்டண உயர்வினால் தற்போது பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், சில மாற்றங்கள் எதிர்காலத்தில் இந்த செலவுகளை சமநிலைப்படுத்த உதவலாம். விமான நிலையத்திற்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். எதிர்ப்பு அதிகரித்தால், அரசு கட்டண உயர்வை மீண்டும் பரிசீலிக்கலாம். அதிக பேருந்துகள், அதிக பொதுப் போக்குவரத்து வசதிகள் வரலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications