குடியிருப்பு நலசங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் குடியிருப்போருக்கு ஏகப்பட்ட விதிகளை பின்பற்ற சொல்வது இந்தியாவில் பொதுவான விஷயம் தான். ஆனாலும், சமீப காலங்களில் இதுபோன்ற அமைப்புகளில் குடியிருப்போருக்கு விதிக்கப்படும் விதிகள் இதுவரை கேள்வியுறாத ஒன்றாகவும், உடனே இணையத்தில் வைரலாகும் படியும் அமைந்து விடுகின்றன.
கடுமையான விதிகள் குடியிருப்போருக்கு அதிகப்படியான சவுகரியத்தை வழங்கவும், பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கவுமே விதிக்கப்படுவதாக அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்கள் கூறுகின்றன.
இதற்கு முற்றிலும் முரணாக இருக்கும் வகையில், பெங்களூருவின் குந்தனஹல்லி கேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக போட்டுள்ள கண்டிஷன்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்
பெங்களூருவின் குந்தனஹல்லி கேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கும் பேச்சிலர்கள், திருமணம் ஆகாத பெண்கள் தங்களின் ஃபிளாட்டில் இரவு 10 மணிக்கு பின் விருந்தினர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது.
விருந்தினர்கள்
தவிர்க்க முடியாத காரணங்களில் விருந்தினர்கள் இரவு தங்கும் சூழல் ஏற்படும் பட்சத்தில் வாடகைக்கு குடியிருப்போர் தங்களின் வீட்டு உரிமையாளரிடம் இரவு விருந்தினர்களை தங்க வைத்துக் கொள்ள மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற வேண்டும் என குடியிருப்பு சார்பில் விதிமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெடிட் பதிவு
இப்படியொரு கட்டுப்பாடு இருப்பது பற்றி பயனர் ஒருவர் ரெடிட் தளத்தில் தனது மனக்குமுறுலை வெளிப்படுத்தி இருந்தார். அதில், "இரவு 10 மணிக்கு மேல் பேச்சிலர்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களின் வீடுகளில் விருந்தினர்கள் தங்க அனுமதி இல்லை. விருந்தினர்கள் இரவு 10 மணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை.
மின்னஞ்சல் மூலம் அனுமதி
ஒருவேளை தங்க வைத்தே ஆகவேண்டும் எனில், வீட்டு உரிமையாளரிடம் மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற வேண்டும். இதோடு விருந்தினரின் அடையாள அட்டையை குடியிருப்பு மேலாளர் அல்லது நலச்சங்க அலுவலகத்தில் கொடுத்து, எவ்வளவு நேரம் தங்க வேண்டும், தங்குவதற்கான காரணம் உள்ளிட்டவற்றை குடியிருப்பின் நுழைவு பகுதியில் இருக்கும் மைகேட்-இல் தெரிவிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இரவு 10 மணி
இதே குடியிருப்பில் மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில், இரவு 10 மணிக்கு பின் அதிக ஒலியை எழுப்ப கூடாது, இரவு நீண்ட நேரத்திற்கு பார்டி செய்யக்கூடாது. இரவு 10 மணிக்கு பின் பால்கனி, நடைக்கூடம் உள்ளிட்ட இடங்களில் மொபைல் போனில் பேசக்கூடாது உள்ளிட்டவை அடங்கும்.
மாரத்தள்ளி வீடு
இவரது பதிவிற்கு கமெண்ட் செய்த மற்றொரு நபர், "மாரத்தள்ளியில் உள்ள எனது குடியிருப்பில் ஆண் பேச்சிலர்கள் பெண்களின் வீடுகளுக்கு செல்கின்றார்களா என்பதை சரிபார்ப்பது கூட ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பேச்சிலர்களின் வீடுகளுக்கு, குடியிருப்பின் செக்யூரிட்டி நேரடியாக வந்து, விருந்தினர்கள் சென்று விட்டார்களா, இல்லையா என்பதை சோதனை செய்கின்றனர்," என தெரிவித்து இருக்கிறார்.
ஆன்லைனில் பகிரப்பட்டதை அடுத்து, பலரும் இதுபோன்ற விதிமுறைகளை வறுத்தெடுத்து வருகின்றனர். பலர் இதுபோன்ற விதிகள் ஏற்படுத்தும் சங்கடத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விடுதியை விட மோசமாக உள்ளது
"இது தங்கும் விடுதியை விட மோசமாக இருக்கிறது. நீங்கள் வாடகைக்கு குடியிருக்க வாடகை செலுத்துகின்றீர்கள். நீங்கள் வாடகை செலுத்தும் வரையில், அது உங்களின் வீடு என வாடகை ஒப்பந்தங்கள் கூறுகின்றன. யார் யார் உங்களின் வீட்டிற்கு வருகின்றனர், நீங்கள் பால்கனியில் என்ன செய்கின்றீர்கள் என்பது முழுக்க முழுக்க உங்களின் சுதந்திரம். இந்த நாட்களில் குடியிருப்பு சங்கங்களின் விதிமுறைகள் மிகவும் மோசமான ஒன்றாக மாறி வருகிறது," என நபர் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.
பால்கனி
மற்றொரு நபர் இதுபற்றி கூறும் போது, "இதன் முதல் பாகம், பேச்சிலர்களுக்கான குறிப்பிட்ட விதிகள் மிகவும் அருவருப்பாக உள்ளது. பால்கனி போன்ற பொதுவான பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அழைப்புகள் கூடாது என்பது போன்ற பொதுவான விதிகளை ஏற்றுக் கொள்ளலாம். பலர் இவர்களின் சத்தம் எப்படி இருக்கும் என்பதை அறியமாட்டார்கள்." என தெரிவித்தார்.
சிறிய அப்பார்ட்மென்ட்
"இதனால் தான் குடியிருப்பு சங்கங்களில் வசிப்பதை நான் வெறுக்கிறேன்! மூன்று அல்லது ஐந்து மாடிகள் கொண்ட வீடுகள் தான் சிறப்பானது. இங்கு அடுக்குமாடி குடியிருப்பை விட வாடகையும் குறைவு! இது மிகவும் வருந்தச் செய்யும் வகையில் இருக்கிறது," என மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.
மடத்தனம்
"மடத்தனமாக உள்ளது, நீங்கள் உங்கள் விதிகளுக்கு ஏற்ப வாழ வேண்டும், நீங்கள் வாடகை கொடுத்து அங்கு வசிக்கும் வரை அந்த இடத்திற்கு நீங்கள் தான் உரிமையாளர். அதிக ஒலியெழுப்பும் பார்ட்டிகளை தவிர்க்கலாம், ஆனால் இதர விதிகள் மற்றவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் வகையிலேயே உள்ளது," என்று தனது குமுறலை பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications