வருடத்தின் 365 நாட்களும் இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும் இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில் குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு பெங்களூர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்துடன் பெங்களூர் வந்துள்ளனர்.
இப்படி பல காரணத்திற்காக பெங்களூர் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் பெங்களூரில் வீட்டு வாடகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது, மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2 மாதத்தில் பெங்களூரில் மீண்டும் ஒரு ரவுண்ட் வாடகை உயர்ந்துள்ளது. அப்பார்ட்மென்ட் அல்லாத ஒரு தனி கட்டிடத்தில் 2BHK வீட்டின் வாடகை தற்போது பெங்களூரில் சராசரியாக 35,000 முதல் 38,000 ரூபாயில் கிடைக்கிறது. இது முன்பு 25,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே 2BHK வீடுகள் கேட்டெட் கம்யூனிட்டியில் இருந்தால் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக தொகைக்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது பெங்களூர் புறநகர் பகுதியில் 20000 முதல் 25000 ரூபாய்க்கு கிடைக்கிறது, முன்பு இது 12000 முதல் 15000 ரூபாயாக இருந்தது.
மேலும் பெங்களூரின் முக்கிய மற்றும் அதிகப்படியான ஐடி சேவை நிறுவனங்கள் இருக்கும் சர்ஜாபுரா, இந்திராநகர், HSR லேஅவுட் போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 3BHK பிளாட்களின் மாத வாடகை 80,000 ரூபாய்க்கு மேல்.
இதனால் புதிதாக வாடகை வீடுகளை தேடுவோர் பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற இடங்களைப் தேர்வு செய்கின்றனர். பல அப்பார்ட்மென்ட்களில் பழைய குடியிருப்பாளர்களுக்கம் வாடகை இன்றைய சந்தை நிலவரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டை காலி செய்யும் மனநிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் சொந்தமாக வீட்டை வாங்கும் முயற்சியில் உள்ளனர்.
பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அப்பார்ட்மென்ட் வாடகை பிற பகுதிகளை ஒப்பிடுகையில் 15,000 - 20,000 ரூபாய் வரையில் உள்ளது. இதுவும் அப்பார்ட்மென்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப மாறுகிறது.
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications