1 மாத வீட்டு வாடகை ரூ.1.1 லட்சம்! பெங்களூர் வாடகையைப் பார்த்து கதிகலங்கிப்போன நெட்டிசன்கள்!

அது என்னவோ பெருநகரங்களில் மட்டும் வாடகை வீடுகளுக்கு அவ்வளவு மவுசு. கிராமப்புறங்களில் இருக்கும் பல இளைய தலைமுறையினர் பணிக்காக நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். ஏற்கனவே குடும்பத்தை விட்டு பிரிந்து சொற்ப சம்பளத்திற்காக பணிபுரிந்து கொண்டிருக்கும் பலருக்கு வீடு தேடுவதே மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் எகிறும் வீடு வாடகை ஒருபுறம் பாடாய் படுத்துகிறது.

இத்தகைய சூழலில் பட்ஜெட்டுக்குள் ஒரு வீட்டை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றதாகவே மாறிக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் ஒருவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டை பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டைப் பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர். தன்னுடைய X பக்கத்தில் ஒரு பயனர், "பெங்களூரில் 3 பெட்ரூம் வீட்டுக்கு ரூ.1.1 லட்சம் வாடகையா? இது உண்மையிலேயே பலருடைய மாதச் சம்பளம்" என்று ஆதங்கத்தோடு பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் உடனடியாக அவருடைய போஸ்டை பகிரத் தொடங்கினர்.

அதோடு அந்தப் பயனர் ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் அப்லோட் செய்திருந்தார். அதில் டொம்லூர் மற்றும் இந்திரா நகரில் உள்ள எம்பஸி கோல்ஃப் லிங்க்ஸ் பிசினஸ் பார்க் அருகே அமைந்திருக்கும் ஒரு வீட்டின் புகைப்படம் இருந்தது. அந்த வீட்டில் டெர்ரேஸ், பால்கனி, பூஜையறைகள், மாடுலர் கிச்சன், லிவிங் ரூம், வுட்டன் ஃப்ளோரிங் என அனைத்து வசதிகளும் இருக்கிறது. அதுமட்டுமின்றி நீச்சல் குளம், ஜிம், டென்னிஸ் கோர்ட், ஸ்கேட்டிங் போர்ட், அழகான பூங்கா என அனைத்தும் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் வாடகையைக் கேட்டால்தான் தலை சுற்றும். இங்கு குடியேற வேண்டுமானால் அதற்கு மாத வாடகையாக ரூ.1,10,000 செலுத்த வேண்டும். இதில் மெயின்டனன்ஸ் சார்ஜ் ரூ.6000 தனியாக வழங்க வேண்டும்.

1 மாத வீட்டு வாடகை ரூ.1.1 லட்சம்! பெங்களூர் வாடகையைப் பார்த்து கதிகலங்கிப்போன நெட்டிசன்கள்!

அட்வான்ஸ் தொகையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். 1 வீட்டிற்கு ரூ.4 லட்சம் அட்வான்ஸ் செலுத்த வேண்டும். இவருடைய போஸ்ட் ட்ரெண்டிங் ஆனதும் கமெண்ட் செக்ஷனில் சண்டை பிடிக்காத குறைதான். ஆளாளுக்கு தங்களுடைய குமுறல்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். அதில் ஒரு நபர், "உண்மையிலேயே இது பகல் கொள்ளை தான். இந்த வீட்டிற்காக இவ்வளவு பணம் கொடுக்கிறவர்கள் பணக்காரர்கள் கிடையாது. உண்மையிலேயே அவர்கள் தான் முட்டாள்கள்", என்று கமெண்ட் செய்திருந்தார்.

மற்றொரு நபரோ இந்த பில்டிங் பார்ப்பதற்கே ரொம்ப பழைய பில்டிங் போல இருக்கிறது என்று கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கிடையில் மும்பைவாசி ஒருவர் "இதைவிட எங்கள் ஊரில் வாடகை அதிகம். மும்பையில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் வரை வாடகை செலுத்தும் நபர்கள் இருக்கிறார்கள்", என்று பெங்களூருக்கே டஃப் கொடுக்கும் வகையில் கமெண்ட் செய்திருந்தார்.

இன்னொரு நபரோ தான் அந்த அப்பார்ட்மெண்டுக்கு அருகில் குடியிருப்பதாகக் கூறியிருந்தார். "இந்த பில்டிங் கட்டி உண்மையிலேயே 20 வருடமாகிறது. வெளியிலேயே அத்தனை வெடிப்புகள். இதை கட்டிய ஓனர் நமக்கு ஏதோ இலவசமாக வீடு கொடுக்கிற மாதிரி சீன் போடுவார். இங்கே யாரும் குடியேறிடாதீங்க!" என கமெண்ட் செய்திருந்தார். பெங்களூரில் வீட்டு வாடகை மற்றும் பிற செலவுகளை எல்லாம் கவனித்து அவ்வப்போது இதுபோன்ற போஸ்ட்கள் பகிரப்படுவது வழக்கம்.

பணிக்காக பெருநகரங்களை நோக்கி படையெடுக்கும் பலர், வாடகை பிரச்சினையை எதிர்கொள்ள தான் செய்கிறார்கள். தொடர்ந்து வீட்டு வாடகை ஏறிக்கொண்டே வந்தாலும் சிலர் பெறும் சம்பளம் மட்டும் இன்னும் உயரவே இல்லை. இதே போன்ற சூழல் நீடித்தால் இனிவரும் காலங்களை சாமானியர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? என்ற கேள்வியே நம் முன் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+