பெங்களூர்: இந்தியாவின் ஸ்டார்ட் அப் நகரம் புதுமைகளுக்கான நகரம் என பல்வேறு புகழ்பெற்றிருக்கிறது பெங்களூர். அந்த வகையில் அண்மைக்காலமாக பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களும் பல்வேறு புதுமைகளை புகுத்தி செய்திகளில் இடம்பிடித்து விடுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய கியூ ஆர் கோடை தன்னுடைய ஸ்மார்ட் வாட்சில் காட்டி ஒரு பயணியிடம் யுபிஐ மூலம் கட்டணத்தை பெற்றுக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேபோல தற்போது பெங்களூரை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறார்.

ஆட்டோவில் ஓட்டுநரின் இருக்கையை அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் இருக்கை கொண்டு மாற்றி அமைத்துள்ளார் . ஷிவானி என்ற ஒரு எக்ஸ் தள பயனாளர் அண்மையில் பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரின் இருக்கை அவரை மிகவும் ஈர்த்துள்ளது.
இதனை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள ஷிவானி ஆட்டோ ஓட்டுனரின் இருக்கையில் அலுவலக இருக்கை கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் இன்னும் சௌகரியமாக அமர்ந்து கொண்டு ஆட்டோ ஓட்ட முடியும்.
இது போன்ற புதுமைகளால் தான் எனக்கு பெங்களூரு மிகவும் பிடிக்கிறது என பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு எக்ஸ் தள பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
குறிப்பாக Atlassian கார்ப்பரேஷன் என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு தலைவரான டேவிட் போவான் இந்த ஆட்டோ ஓட்டுனரின் புதுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.இதற்காகவே நான் பெங்களூருக்கு வரப்போகிறேன். பெங்களூருவில் பல்வேறு புதுமைகளை தெரிந்து கொள்ளப் போகிறேன்.
பெங்களூருவின் தனித்துவமான கலாச்சாரத்தை நான் நேரடியாக வந்து அனுபவிக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஷிவானி போவான் நிச்சயமாக நீங்கள் பெங்களூருக்கு வரவேண்டும் இங்கே சாதாரண மக்களின் கிரியேட்டிவிட்டி உங்களை பிரமிக்க வைக்கும் என பதிவு செய்துள்ளார். பல பயனாளர்களும் சௌகரியமாக தன்னுடைய வேலையை செய்வதற்காக அவர் எடுத்துள்ள முயற்சியை பாராட்டியுள்ளனர்.
நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என்பதால் இதுபோன்ற ஒரு இருக்கையில் அமர்ந்து வாகனம் ஓட்டுவது அத்தகைய பிரச்சனைகளை குறைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என ஒரு பயனாளர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications