பெங்களூரு: இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவ்வாறு தொழில் புரிய வேண்டும் என்பதற்காக சிறந்த ஐடியா கொண்டிருந்தாலும் பலரிடம் அதற்கு போதிய நிதி இருப்பதில்லை. இதனாலேயே பலரும் தொழில் ஐடியாவை கைவிட்டு கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய கனவை கைவிட மறுத்து ஒரு இளைஞர் நூதன முறையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய கனவை அடைவதற்காக வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளார். பெங்களூருவை சேர்ந்தவர் தான் சாமுவேல் கிறிஸ்டி என்ற இளைஞர். பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.

இவருக்கு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதற்காக சிறந்த ஐடியாவையும் வைத்திருக்கிறார் ஆனால் அதற்கு போதிய மூலதனம் அவரிடம் இல்லை. எனவே தன்னுடைய ஆட்டோவில் ஒரு நோட்டீஸை ஒட்டி அதன் மூலம் ஸ்டார்ட் அப்புக்கு தேவையான நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தன்னுடைய இருக்கைக்கு பின்புறம் அதாவது பயணிகள் இருக்கைக்கு முன்பகுதியில் தெரியும்படி ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளார். அதில் "ஹாய் என்னுடைய பெயர் சாமுவேல் கிறிஸ்டி நான் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறேன், எனக்கு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்பது பெரிய கனவு. எனவே இதற்காக நான் நிதி திரட்டுகிறேன் உங்களுக்கு இது தொடர்பாக தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் என்னுடன் பேசுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனை அவருடைய ஆட்டோவில் பயணம் செய்த ஒரு நபர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை எடுத்து ஏராளமானவர்களை சென்றடைந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனரின் இந்த தனித்துவமான யோசனை பல்வேறு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது என்ற இவருடைய எண்ணம் கண்டிப்பாக இவரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என இந்த பதிவின் கீழ் ஏராளமானவர்கள் தங்களுடைய கருத்தினை தெரிவித்துள்ளனர்.
பலரும் இந்த ஆட்டோ ஓட்டுநரை கண்டறிந்து அவருக்கு உதவி செய்ய முன் வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் கனவை எட்டி விடலாம் என்பதற்கு இவருடைய முயற்சி முன் உதாரணமாக இருக்கிறது. பலரும் இவருடைய கனவு வெற்றி அடைய வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications