இந்தியாவில் ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைகள் மக்களின் தினசரி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், ஓலா, உபர் தாண்டி சமீபத்தில் நம்ம யாத்ரி என்னும் நிறுவனம் தனது சேவையை துவங்கியது. இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களை போல் அல்லாமல் மத்திய அரசு உருவாக்கிய Open Network for Digital Commerce (ONDC) தளத்தில் இணைத்து மக்களுக்கு அளித்து வருகிறது.

பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நம்ம யாத்ரி கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதன் பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுமார் 189 கோடி வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) மூலம் இயங்கி வரும் நம்ம யாத்ரி, ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு போட்டியாகத் தொடங்கப்பட்டது.
நம்ம யாத்ரி பிற ஆட்டோ சேவை நிறுவனங்கள் போல் அல்லாமல் ஜீரோ கமிஷன் மாடல் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட ₹19 கோடியை சேமிக்க உதவியுள்ளது. , ONDC ஊழியர் டினா குர்னானி LinkedIn தளத்தில் செய்யப்பட்ட பதிவில் பெங்களூருவில் உள்ள நம்ம யாத்ரி தளத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில் 189 கோடி சம்பாதித்துள்ளனர்.
இந்த வருவாயில் 100% ஜீரோ கமிஷன் மாடல் மூலம் ஓட்டுனர்களுக்கு செல்கிறது. ஓலா, உபர் ஆகியவை 10% கமிஷன் எடுத்துக் கொண்ட நிலையில், நம்ம யாத்ரி சேவை மூலம் கமிஷன் இல்லாத காரணத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் மொத்தமாக 19 கோடி ரூபாய் கமிஷன் பிரிவில் மட்டுமே சேமித்துள்ளனர்.
போக்குவரத்து துறை, ஓலா மற்றும் உபர் ஆகிய நிறுவனங்கள் ஆட்டோ சேவையில் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இரு தரப்புக்கும் நீண்ட கால சண்டைக்கு மத்தியில் நம்ம யாத்ரி ONDC மூலம் இணைக்கப்பட்டு தனது சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது.
நம்ம யாத்ரி வாடிக்கையாளர்களை நேரடியாக ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைக்கிறது மற்றும் இடைத்தரகர்களை அகற்றி வாடிக்கையாளர்களுக்கு மலிவான கட்டணத்துடன் ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவையை வழங்குகிறது.
Ola, Uber மற்றும் Rapido ஆகியவை 2 கிலோமீட்டருக்கும் குறைவான பயணங்களுக்கு கூட ₹100க்கு மேல் வசூலிப்பதற்கான அரசு கூறும் வேளையில் Namma Yatri கட்டணங்கள் அரசாங்கம் நிர்ணயித்த விலைப் பட்டியலின் அடிப்படையில் அமைகிறது. ஒவ்வொரு பயணத்திற்கும், 2 கிமீ வரை குறைந்தபட்ச கட்டணம் ₹30 மற்றும் அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ₹15. பதிவுக் கட்டணமாக ₹10 இருக்கும், மேலும் ஓட்டுநர்கள் அதை ₹30 வரை உயர்த்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications