இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூர் எப்படி டிராபிக் பிரச்சனைக்கு பிரபலமோ, அதேபோல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் பிரபலம். ரோபிடோ பிரச்சனை, மொழி பிரச்சனை, அதிக கட்டணம் வசூல் என பல விஷயங்களை பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் பல தருணம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது.
பெங்களூரு நகரத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்நகரின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப பல புதுமையான விஷயங்களை செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பட்டதாரி ஆட்டோ ஓட்டுனர் தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக விளம்பர போஸ்டரை தனது ஆட்டோவில் ஒட்டியிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. இப்படி பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களின் சமீபத்தில் புதிதாக ஒரு விஷயத்தை செய்ய துவங்கியுள்ளனர்.
சமீபத்தில், ஒரு பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் "எர்கோனமிக்" சேரை தனது ஆட்டோவில் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டிய புகைப்படம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எர்கோனமிக் சேர் நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றும் மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இந்த சேர் மூலம் முதுகு, தொடை, கால்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின்பு அலுவலகங்களில் இருப்பது போலவே வீட்டிலும் மக்கள் எர்கோனமிக் சேர் வாங்கி பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

இதன் நீட்சியாக தற்போது ஆட்டோவில், ஓட்டுநர் தங்களது வசதிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இருக்கையை பயன்படுத்த துவங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு ஆட்டோ ஒட்டுநர் மட்டுமே இத்தகைய சேரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பலர் பயன்படுத்த துவங்கி வருகின்றனர்.
சமீபத்தில் ஒருவர் டிவிட்டர்வாசி ஆட்டோவில் முழு அளவிலான கேமிங் இருக்கை பொருத்தப்பட்டிருந்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். இது பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களின் புதிதாக சிந்தக்கும் முறையை காட்டி இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் இதேபோல் ஆட்டோ ஓட்டுனர் யாரேனும் எர்கோனமிக் சேர் பயன்படுத்தியதை நீங்கள் பாத்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications