இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் செல்ல முடியாத காரணத்தால் பெங்களூரு பெருநகர அரசு பேருந்தில் திங்கள்கிழமை சென்றார்.
பெங்களூரில் தனியார் போக்குவரத்து அமைப்புகள் அனைத்தும் இன்று அரசின் சக்தி திட்டம் அதாவது பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்டோ, கேப், டாக்சி என எந்த விதமான தனியார் போக்குவரத்தும் இயங்கவில்லை.

இதனால் 52 வயதான முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் செல்ல முடியாத காரணத்தால் அரசு பேருந்தில் சென்றுள்ளார். மேலும் அனில் கும்ப்ளே விமான நிலையத்திலிருந்து பேருந்தில் செல்லும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கும்ப்ளே விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு பெங்களூர் அரசு இயக்கும் ஏசி வோல்வோ பேருந்தை இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு பயணித்துள்ளார், இந்த தருணத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்ட நிலையில் அவருக்குப் பின்னால் சக பயணிகள் அமர்ந்திருந்ததையும் புகைப்படத்திலிருந்து பார்க்க முடிந்தது.
அனில் கும்ப்ளே சற்றும் யோசிக்காமல் மக்கள் பயணிக்கும் அரசு பேருந்தில் பயணித்ததை பலரும் பாராட்டினர் மற்றும் பொது போக்குவரத்தை ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அனில் கும்ப்ளே-வின் டிவிட்டர் போஸ்டை கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது டிவிட்டரில் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ அனில் கும்ப்ளே அவர்கள் விமான நிலையத்திலிருந்து BMTC வால்வோ பஸ்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியை அமைக்கிறது.
அனைவரும் அவரது வழியைப் பின்பற்றி பசுமையான மற்றும் நிலையான நகரத்திற்கு பொதுப் போக்குவரத்தை ஆதரிப்போம். BMTC பாதுகாப்பான, வசதியான மற்றும் மலிவு பயண அனுபவத்தை வழங்க உறுதி கொண்டு உள்ளது என தெரிவித்தார்.
இது ஒருபுறம் நடக்க இன்று பெங்களூரில் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் ரோப்பிடோ டிரைவர்கள் மற்றும் கேப் டிரைவர்கள் தாக்கப்பட்டனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications