மார்ச் 22 ஆம் தேதி அதாவது நாளை, பல்வேறு கன்னட அமைப்புகள் இணைந்து நடத்தும் மாநிலம் தழுவிய முழு அடைப்பால் பெங்களூர் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக (KSRTC) ஓட்டுநர் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை பெங்களூர் மக்களின் இயல்பு வாழ்க்கை காலை முதல் மாலை வரையில் பாதிக்கப்பட கூடும். எனவே நாளை எந்த சேவையெல்லாம் இருக்கும், எந்தெந்த சேவை எல்லாம் இயங்காது என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது பெங்களூருவில் எந்தெந்த துறைகள் திறந்திருக்கும், எந்தெந்த துறைகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிவது மூலம் பெங்களூர் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை திட்டமிடுவது எளிதாகும்.
எந்தெந்த சேவைகள் இயங்காது:
பொதுப் போக்குவரத்து: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) மற்றும் KSRTC பேருந்து சேவைகள் இயங்காது. இருப்பினும், முழுமையான சேவை நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
டாக்சி: மேலும், சில தனியார் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்கங்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவற்றின் சேவைகளும் பாதிக்கப்படலாம்.
கல்வி: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்துள்ளன.
மார்கெட்: பெங்களுரில் முக்கிய மார்கெட் பகுதியான சிக்பேட், கே.ஆர். மார்க்கெட் மற்றும் காந்தி பஜார் போன்ற பகுதிகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்படலாம். போராட்டங்கள் தீவிரமடைந்தால், சில வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் மூடப்பட வாய்ப்புள்ளது.
ஆபீஸ்: அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ஊழியர்களின் வருகை குறையக்கூடும்.
எந்தெந்த சேவைகள் இயங்கும்:
மெட்ரோ: பெங்களூரின் அடையாளமாக இருக்கும் நம்ம மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி சேவை இயங்காது என்பதால் மெட்ரோ நிலையத்தில் இருந்து நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது.
அத்தியாவசிய சேவைகள்: மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படும். ரயில் மற்றும் விமான சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முக்கிய போக்குவரத்து சேவைகள் இயங்காது என்பதால் ரயில் நிலையத்திற்கும், விமான நிலையத்திற்கும் செல்வது கடுமையாகும்.
பிற முக்கிய சேவைகள்: பெட்ரோல் பங்க், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். ஆனால் சிறிய வணிகங்கள் மூடப்படலாம்.
Blinkit, Zepto மற்றும் Instamart போன்ற ஆப் சார்ந்த குவிக் காமர்ஸ் சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications