இந்தியாவின் டெக் நகரமாக விளங்கும் பெங்களூரில் போக்குவரத்து துறையினர் 24 மணிநேர வேலை நிறுத்தத்தை அறிவித்த காரணத்தால் பெங்களூர் மக்கள் கணிசமான வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதன் மூலம் டிவிட்டரில் பல நெட்டிசன்கள் பெங்களூர் பந்த் குறித்த டிவீட்களை குவித்துள்ளனர்.
கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து கழக கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ரிக்ஷா, டாக்சி, மேக்சி கேப், பள்ளி பேருந்து நடத்துநர்கள், நகரங்களுக்கு இடையேயான பேருந்து நடத்துநர்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட 32 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பெங்களூர் சாலையில் டிராபிக் மிகவும் குறைவாக உள்ளது.

கர்நாடக அரசு சக்தி திட்டம் என்ற பெயரில் கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து, சக்தி திட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் 32 தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இன்று பெங்களூரில் பல இடங்களில் ஆட்டோ ஓட்டுனர் சாலையில் போராட்டம் நடத்தினர், இதனால் ஆங்காங்கே பிரச்சனைகள் உருவானது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெங்களூரில் இன்று அதிகப்படியான ரேபிடோ ஓட்டுனர்கள் பல தனியார் போக்குவரத்து ஊழியர்களால் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் பெரிய அளவில் டிரெண்டான நிலையில் தற்போது பல ரேபிடோ ஓட்டுனர்கள் பீதியில் உள்ளனர்.
பெங்களூரில் தனியார் நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கல் வீச்சு சம்பவங்கள் மற்றும் rapido bike கேப்டனும் போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். ரேபிடோவை தடை செய்ய வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன
தனியார் வாடகை வாகனங்களை இயக்க கூடாது என முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு தனியார் வாகனத்தை சிலர் அடித்து உடைக்க முயற்சி செய்கின்றனர்.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே இருக்கும் ஹோசா சாலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்துகின்றனர்.
பெங்களூரில் மிகவும் பிரலமான மடிவாலாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்துகின்றனர். இதேபோல் தனியார் கார் ஓன்றை தாக்கியுள்ளனர்.
மௌரியா சர்க்கிள் அருகே, கார் ஓட்டுநரை தடுத்து, கார் சாவியைப் பறித்து, டிரைவரை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி, வழி மறித்தனர், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசார் தலையிட்டு டிரைவரை மீட்டனர்.
பைக் டாக்சி ஓட்டுனர்களை போராட்டக்காரர்கள் மிரட்டும மற்றொரு சம்பவம்
இன்று பெங்களூரில் தனியார் கேப்களின் கண்ணாடியை போராட்டக்காரர்கள் உடைத்துள்ளதாக ஒருவர் தெரிவித்தார்


Click it and Unblock the Notifications