பெங்களூரில் இன்சூரன்ஸ் பேங்கிங் பிரிவில் கிளைம் பிரிவில் சுமார் 8 வருடம் பணியாற்றியனார் அமித் கிஷன். இந்த பயணத்தில் அமித் செய்யும் பெரும்பாலான கிளைம்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் தொடர்புடையது, அதிலும் முக்கியமாக கேன்சர் தொடர்பான வழக்குகள் தான்.
இந்த நிலையில் அமித் கிஷன் தனது முக்கியமான வாடிக்கையாளர் ஒருவரை கேன்சர் நோய் காரணமாக இழந்தார், இந்த நிலையில் வாழ்வின் முக்கியதுவத்தையும் புரிதலையும் எதிர்கொண்டார். அதன் பின்பு கேன்சர் நோய்க்கான அடித்தளம் என்னென்று ஆராய துவங்கினார் அமித் கிஷன்.

நாம் சாப்பிடும் உணவு, நாம் வாழும் வாழ்க்கை தான் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்து 2019ல் தன்னுடைய வேலையை விடுத்து, தன்னுடைய முன்னோர்களின் வழியில் ஆர்கானிக் விவசாயம் செய்ய துவங்கினார். தற்போது வருடத்திற்கு 21 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று வருகிறார்.
2019 ஆம் ஆண்டு அமித் கிஷன் தனது சகோதரர் அஷ்ரித் உடன் இணைந்து 1.5 கோடி ரூபாய் கடனுடன் Hebbevu Farms நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது இவர்களிடம் 15 ஏக்கர் நிலம் இருந்தது, இந்த நிலத்தில் என்ன செய்யலாம், எப்படி ஆர்கானிக் விவசாயம் செய்வது என்பதை சில காலம் ஆய்வு செய்தனர்.
கடந்த 5 வருடத்தில் அமித் கிஷன் சுமார் 700 பசு மற்றும் எருமை மாடுகளை வைத்துள்ளார், மேலும் 40க்கும் அதிகமான தானியங்கள மற்றும் காய்கறிகளை ஆர்கானிக் முறையில் வளர்த்து வருகிறார். இதோடு பால் பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றையும் விற்கிறார்.
ஒரு நாளுக்கு 6 டன் காய்கறிகளும், 1500 லிட்டர் பால் பெங்களூரில் விற்கிறார். 15 ஏக்கராக இருந்த விவசாய நிலம் தற்போது 650 ஏக்கராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது வருடத்திற்கு 21 கோடி ரூபாய் வருமானம் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications