'இந்த' வங்கி மீது அபராதம்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து அனைத்துத் தரப்பு வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

 

சமீபத்தில் இந்தியாவில் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் ஆர்பிஐ-யின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் பல கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை மோசமாக இருப்பதைக் கண்டுப்பிக்கப்பட்ட நிலையில், பல வங்கிகளின் வங்கி உரிமத்தை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெங்களூர் வங்கி மீது ஆர்பிஐ அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை..இனி குறையவே குறையாதா.. இன்று எவ்வளவு? கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை..இனி குறையவே குறையாதா.. இன்று எவ்வளவு?

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கி லிமிடெட் மீது, எக்ஸ்போஷற் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கீழ் வங்கிகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்கும், விதிகளை மீறியதற்காகவும் சுமார் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கி

பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 28 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இந்த அபராதத்தைப் பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கிக்கு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தை வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) பிரிவு 56 மற்றும் பிரிவு 46 (4) (i), பிரிவு 47 A (1) (c) ஆகிய விதிகளின் கீழ் ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது.

மக்கள் பயப்பட வேண்டாம்
 

மக்கள் பயப்பட வேண்டாம்

பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கி ஒழுங்குமுறை இணக்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறியது வாயிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் மீதான குறைபாடுகள் சார்ந்தது இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.

மூலதன நிதி

மூலதன நிதி

மார்ச் 31, 2020 மற்றும் மார்ச் 31, 2021 மத்தியிலான காலகட்டத்தில் அதன் நிதி நிலையை ஆய்வு செய்ததில், வங்கி வர்த்தக அறிக்கையில் முதலீட்டு அளவுகளில், மூலதன நிதியில் 15% என்ற தனிநபர் வெளிப்பாடு வரம்பை மீறியது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து ஆர்பிஐ, வங்கி நிர்வாகத்திற்கு நேரில் விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அளித்து உள்ளது.

தனிப்பட்ட விசாரணை

தனிப்பட்ட விசாரணை

இந்த நோட்டீஸ்-ஐ தொடர்ந்து தனிப்பட்ட விசாரணையின் போது வங்கியின் பதில் மற்றும் வாய்வழி உத்தரவாதங்களைப் பரிசீலித்த பிறகு, ரிசர்வ் வங்கி, இவ்வங்கி விதிமுறைக்கு இணங்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

5 லட்சம் அபராதம்

5 லட்சம் அபராதம்

மேலும் பாரத் கோ-ஆப்பரேடிவ் வங்கி லிமிடெட் விதிக்கப்பட்டு இருந்து மேற்கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வங்கி மீது பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 28 தேதியிட்ட கடிதத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

10 லட்சம் கோடி ரூபாய் கடன்

10 லட்சம் கோடி ரூபாய் கடன்

இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் வெறும் 13 சதவீத தொகையை மட்டுமே வசூலித்துள்ளது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru based Bharat Co-operative Bank penalty of Rs 5 lakhs says RBI

Bengaluru based Bharat Co-operative Bank penalty of Rs 5 lakhs says RBI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X