'Blip' எனும் ஒரு புதிய பேஷன் டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனம், துவங்கி ஒரு வருடத்திலேயே தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பேஷன் பொருட்கள் (அணிகலன்கள், உடைகள்) அனுப்பும் சேவையை வழங்கி வந்தது. இந்நிறுவனம் வெஞ்சர் கேப்பிடல் (venture capital) முதலீட்டாளர்களிடம் இருந்து பெரிய அளவில் நிதி பெற்றிருந்தாலும், சந்தையில் பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் (Flipkart, Amazon போன்றவை) இந்த துறையில் இறங்கியதும், போட்டி அதிகரித்தது. இதனால், Blip-க்கு வாடிக்கையாளர்கள் குறைந்தன. இதனால், நஷ்டத்தில் சிக்கிக் கொண்டது.
இதுதொடர்பாக Blip ஸ்டார்ட்அப்பின் இணை நிறுவனர் அன்ஷ் அகர்வால், தனது LinkedIn பதிவில், நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு வருடமாக தொடக்க நிலையிலேயே கடுமையாக உழைத்த பிறகு, இப்போது நாங்கள் முடிவெடுத்து விட்டோம். இந்த துறையின் எதிர்காலத்தின் மேல் நாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மிகவும் குறைந்த நிதியுடன் இந்த வணிகத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையால், சந்தையில் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தையில் முதலாவதாக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். குறிப்பாக, பங்குதாரர்களை நம்ப வைப்பது கடினமாக இருந்தது. இதனால், நாங்கள் சந்தைக்குள் விரைவில் நுழைய முடியவில்லை. முறையான GTM (go-to-market) திட்டமிடல் இல்லாத சூழ்நிலையில், இந்த வணிகத்தை தொடர்வது பயனுள்ளதாக இருக்காது என்பதை உணர்ந்தோம். எனவே, Blip-ஐ மூடவேண்டும் என்ற கடின முடிவை எடுக்க வேண்டி இருந்தது" என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் இன்னும் இந்த துறையின் வளர்ச்சியிலும், விரைவு காமர்ஸ் துறையில் தனித்தொழில் முயற்சிகளின் அவசியத்திலும் நம்பிக்கை வைக்கிறேன். ஆனால், அதில் நாங்கள் இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. சந்தையில் முதலாவதாக நுழைந்து, குறைந்த வளங்களுடன் புதிய திசையிலேயே முயற்சிகளை மேற்கொண்டோம். அதை நாங்கள் செய்ததில் பெருமை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் "விரைவு பேஷன் டெலிவரி" (Quick Fashion Delivery) துறை வளர்ச்சி பாதையில் பயணிக்க, அதே நேரத்தில் Blip ஸ்டார்ட்அப்பின் மூடல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்திய தகவலின்படி, Newme, Slikk, Blip போன்ற புதிய பிராண்டுகள் மற்றும் Myntra, Ajio, Nykaa போன்ற பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த "ultra-fast fashion" முறையை ஆராய்ந்து வருகிறன. மே மாதத்தில், பெங்களூருவில் செயல்படும் Slikk எனும் 60 நிமிட பேஷன் டெலிவரி ஸ்டார்ட்அப், $10 மில்லியன் (சுமார் ரூ. 83 கோடி) முதலீட்டை Nexus Venture Partners மற்றும் Lightspeed முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றது.
Snitch எனும் பேஷன் பிராண்டின் நிறுவனர் சித்தார்த் டுங்கர்வால் கூறுகையில், விரைவு பேஷன் டெலிவரிக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தினசரி தேவைக்கே உடைகள் வாங்குகிறார்கள். சூழ்நிலை காரணமாக மட்டுமே கடைசி நிமிட ஷாப்பிங் செய்வதற்கே விரைவு பேஷன் தேவைப்படுகிறது. நாங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியபோது, பெரும்பாலானோர் கடைசி நேரத்தில் உடைகள் வாங்குவதில்லை என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Blip மூடப்பட்டாலும், Ultra-fast Fashion Delivery என்ற கோட்பாடு இன்னும் வளர்ச்சி பாதையில் தான் உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் இதில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நிரந்தர தேவைக்குப் பதிலாக, இந்த சேவைக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இல்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications