தமிழ்நாட்டில் மினி பெங்களூராக மாறி வரும் கோயம்புத்துர்-க்கு போட்டியாக மதுரை நகரிலும் அடுத்தடுத்து பல ஐடி நிறுவனங்கள் வர துவங்கியுள்ளது. இதன் வாயிலாக பல டெக் பார்க்குகள் கட்டுப்படுவதோடு, மதுரையில் பல இடத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஐடி சேவை நிறுவனமான Happiest Minds நிறுவனம், பிற ஐடி நிறுவனங்களைப் போலவே 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மதுரையில் இருக்கும் Happiest Minds அலுவலகத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக ஐடி ஊழியர்களை பணியில் சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
Happiest Minds நிறுவனம் மதுரையில் தயா சைபர் பார்க்-ல் புதிய டெவலப்மென்ட் சென்டரை திறந்திந்துள்ளது, மதுரையில் முக்கியமான டெக் பார்க் ஆக கருதப்படுவதில் இதுவும் ஓன்று. Happiest Minds தமிழ்நாட்டு டெக் ஊழியர்களை அதிகம் நம்பியுள்ளது, அதன் பெங்களூர் அலுவலகத்தில் இருக்கும் தமிழ்நாட்டு டெக் வல்லுனர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.
இப்படியிருக்கையில் மதுரையில் புதிதாக துவங்கப்பட்ட டெவலப்மென்ட் சென்டரில் புதிதாக 250 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே 550 ஊழியர்களைக் கொண்டு மதுரை Happiest Minds அலுவலகம் இயங்கி வரும் வேளையில் தற்போது எண்ணிக்கை 800 ஆக உயர உள்ளது.
மதுரையில் தொடர்ந்து ஐடி நிறுவனங்களும், ஐடி ஊழியர்களும் அதிகரித்து வரும் வேளையில் கூடுதலாக ஐடி பார்க், மால், ஆபீஸ் ஸ்பேஸ், கமர்சியல் இடங்களின் தேவை அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர் தடாலடி வளர்ச்சிக்கு மதுரை பக்கபலமாக இருக்கும்.
கோயம்புத்தூரில் அலுவலகம் அமைக்க வரும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் அனைத்திற்கும் மதுரை 2வது சாய்ஸ் ஆக மாறி வருகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications