பெங்களூர்: இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணிநீக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கும் நிலையில், டெக் முதல் சப்போர்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் 2022 துவக்கம் முதல் இந்தியாவில் டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனங்களின் பணிநீக்கம் ஒரு ரவுண்ட் முடிந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாகப் பிற துறை டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
இன்று ஹெல்த் டெக் துறையைச் சேர்ந்த பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான Healthifyme தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
Healthifyme நிறுவனம்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் பல நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் Chiratae என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் முக்கியமான ஒரு நிறுவனம் Healthifyme. இந்த நிறுவனம் பல்வேறு காரணத்திற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
150 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்திய ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Healthifyme சுமார் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. மக்கள் உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செய்து வரும் காரணத்தால் இத்துறை டிஜிட்டல் சேவைக்கு அதிகப்படியான டிமாண்டு உருவானது, குறிப்பாக லாக்டவுன் காலத்தில்.
20 சதவீத ஊழியர்கள் பாதிப்பு
இந்த நிலையில் வர்த்தகம் மொத்தமாக மாறிய நிலையில் Healthifyme நிறுவனம் தனது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 15 முதல் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கத்திற்குச் சந்தை மாற்றத்தையும், லாபத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது எனத் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி மற்றும் வருவாய்
HealthifyMe நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய்க் கணிக்கப்பட்ட அளவை எட்டவில்லை என்பதாலும், போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்ட காரணத்தால் முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலை உருவாக்கியுள்ளது.
நியூ ஏஜ் டெக் நிறுவனங்கள்
இதனால் நியூ ஏஜ் டெக்னாலஜி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வர்த்தகம் மேம்படுத்த முடியாத சூழ்நிலையில் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரித்துக் கணக்குக் காட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து விரைவாகச் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
OYO பணிநீக்கம்
இந்த நிலையில் நேற்று OYO நிறுவனம் மொத்த வர்த்தகத்திலும் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதன் வாயிலாகத் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3700 ஊழியர்களில் சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. OYO நிறுவனத்தின் ப்ராடெக்ட் & இன்ஜினியரிங் அணிகளில் இருக்கும் ஊழியர்கள், OYO வெக்கேஷன் ஹோம் அணி ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
சேர்சாட் பணிநீக்கம்
சேர்சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் அறிவிப்பின் படி இக்குழுமத்தில் இருக்கும் பேன்டசி கேமிங் பிரிவான ஜீத்11 (jeet11) தளத்தை மொத்தமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 100 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும், இதில் பெரும்பாலும் டெக் பிரிவு அல்லாத ஊழியர்கள் தான்.


Click it and Unblock the Notifications