இந்தியாவில் ரெசிஷன் அச்சம் இல்லை, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது என இந்தியா குறித்தும், இந்தியச் சந்தை குறித்தும் பலரும் பல தரப்பினரும் பாசிடிவ் ஆகப் பேசினாலும், இந்தியாவிலும் ரெசிஷன் துவங்கியது கண் முன்னே நிற்கிறது என்றால் மிகையில்லை.
2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் எட்டெக் துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களைத் தான் வர்த்தகம் கிடைக்காத காரணத்தாலும், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத காரணத்தாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது.
ஆனால் தற்போது உணவு டெலிவரி சேவை துறை முறை வேலைவாய்ப்பு சேவை தளங்களைக் கொண்டு இருக்கும் நிறுவனம் வரையில் அனைத்துத் தரப்பு டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பணிநீக்கம் செய்வதில் இறங்கியுள்ளது.
பணிநீக்கம்
உலகம் முழுவதும் பெரிய டெக் நிறுவனங்கள் முதல் சிறிய டெக் நிறுவனங்கள் வரையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பல முன்னணி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், வர்த்தகம் குறைந்துள்ள காரணத்தாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் இறங்கியுள்ளது.
Hirect நிறுவனம்
அப்படி இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாட் மூலம் ஊழியர்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் Hirect என்னும் நிறுவனம் சுமார் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
40% ஊழியர்களைப் பணிநீக்கம்
Hirect நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாக அறிவித்து நிறுவனத்தில் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் குறைந்தது 200 பேர் தங்களது பணியை இழக்க நேரிடும்.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் அதிகளவிலான ஊழியர்களை வர்த்தகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியில் அமர்த்திய நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் உலக நாடுகளை ரெசிஷனுக்குள்ள தள்ளும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்டா முதல் Hirect வரை
இதில் மெட்டா முதல் தற்போது Hirect வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. Hirect தற்போது தனது வர்த்தக மாடலை மொத்தமாக மறுசீரமைப்புச் செய்து வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கை மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது என Hirect சிஇஓ ராஜ் தாஸ் இந்தப் பணிநீக்கம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
லின்கிடுஇன் தளம்
Hirect நிறுவனத்தின் லின்கிடுஇன் தளத்தின் தகவல் படி சுமார் 472 பேர் பணியாற்றுவதாகக் கூறுகிறது. Hirect தற்போது பெங்களூர் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தலைமையாகக் கொண்டு இந்தியா மற்றும் சர்வேதச சந்தையில் இயங்கி வருகிறது.
3 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த Hirect நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 3 ஊழியர்கள் லைவ்மின்ட்-யிடம் பேசுகையில், அக்டோபர் மாதம் தங்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்து எங்களைப் பணியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
ஊழியர்கள் புலம்பல்
இதன் படி நாங்களும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தோம். ஆனால் இதுவரையில் ரிலீவீங் லெட்டர், severance pay போன்ற எந்தச் சலுகையும் அளிக்கவில்லை. இதை விட முக்கியமாக அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து அதன் பின்பு பணிநீக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications