உலக நாடுகளில் பணிநீக்கம் என்பது கடந்த 6 மாதமாக தினமும் கேட்கும் விஷயமாக மாறிவிட்ட நிலையில், இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைமை உருவாகியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் காரணத்தால் புதிய முதலீட்டுகளை ஈர்க்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்கள் மாட்டிக்கொண்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பணிநீக்கம் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் ஆரம்பகட்டமாக 2022 ஆம் ஆண்டு முழுவதும் Edtech நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டு துவக்கம் அனைத்து துறைகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய துவங்கியது. இந்த வரிசையில் முன்னணி யூனிகார்ன் நிறுவனமும், போதுமான நிதி ஆதாரங்களை கொண்டு இருக்கும் வேளையிலும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ரீசெல்லர் ஈ-காமர்ஸ் யூனிகார்ன் நிறுவனமான மீஷோ ஒரு வருடத்தில் அதன் இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி சுமார் 251 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதார மீஷோ தெரிவித்துள்ளது. இதுமூலம் ஒட்டுமொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீத ஊழியர்களை இந்த சுற்றில் பணிநீக்கம் செய்கிறது.
மீஷோ நிறுனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விடித் ஆத்ரே தனது ஊழியர்களுக்கு மே 5 தேதி அனுப்பிய மின்னஞ்சலில் சவாலான மேக்ரோ பொருளாதார சூழல்நிலையை காரணம் காட்டி, பணிநீக்கம் செய்யப்படுவதாக ஊழியர்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளார்.

இந்திய முதலீட்டு சந்தையில் தற்போது நிலவும் கடினமான நிதியியல் சூழலில் பணிநீக்கம் செய்த முதல் சில நியூ ஏஜ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மீஷோ, அதிலும் குறிப்பாக ஈகாமர்ஸ் துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் முதன்மையான நிறுவனமாக உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயக்கும் மீஷோ நிறுவனம், கடந்த ஆண்டு அதன் மளிகைப் பொருட்கள் டெலிவரி பிரிவில் இருந்து 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மளிகைப் பொருட்கள் டெலிவரி பிரிவு முதலில் ஃபார்மிசோ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில் சூப்பர் ஸ்டோர் என பெயரிடப்பட்டு உள்ளது.

தற்போது மீஷோ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் 251 ஊழியர்களுக்கு அவரவர் சம்பளம், பதவி ஆகியவற்றை பொருத்து 2.5 மாதம் முதல் 9 மாதம் வரையிலான severance pay அளிக்கப்பட உள்ளது. இதேபோல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியரிடம் ESOP இருந்தால் இதை வாங்க நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications