2020ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், ஐடித் துறை பெரிய அளவிலான பாதிப்பு அடையாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரொலியாக உலகின் முன்னணி டெக் நகரங்களை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரு, உலகின் வேகமாக வளரும் டெக் நகரமாக மாறியுள்ளது.
இந்திய ஐடி துறை
ஐடி சேவை துறையில் இந்தியாவும், இந்திய ஐடி நிறுவனங்களும் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்துள்ள நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
பெங்களூரு அசத்தல்
இந்த அதிரடி விரிவாக்கம் மற்றும் தொடர் வளர்ச்சியின் காரணமாக உலகிலேயே வேகமாக வளரும் டெக் ஹப்- ஆகப் பெங்களூரு நகரம் உயர்ந்துள்ளது. இது இந்திய ஐடி துறைக்கும், ஐடி ஊழியர்கள் பெருமைகொள்ளும் விஷயமாகத் திகழ்கிறது.
டாப் 5 டெக் நகரங்கள்
பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்த நிலையில், லண்டன், முனிச், பெர்லின், பாரிஸ் ஆகிய நகரங்கள் அடுத்த 4 இடத்தைப் பிடித்து டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. மேலும் 6வது இடத்தில் இந்தியாவின் நிதியியல் தலைநகரான மும்பை 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
தடாலடி வளர்ச்சி
இந்நிலையில் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூரு 2016ல் இருந்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் வெறும் 1.3 பில்லியன் டாலராக இருந்த பெங்களூரு நகரத்தின் டெக் சந்தை மதிப்பு 2020ல் 5.4 மடங்கு அதிகரித்து 7.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
லண்டன் வளர்ச்சி
இதே 2016 முதல் 2020 காலகட்டத்தில் லண்டன் டெக் சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலரில் இருந்து 10.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து 3.2 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. மும்பை இக்காலகட்டத்தில் 0.7 பில்லியன் டாலரில் இருந்து 1.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications