இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூர் டிராபிக் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனை காரணமாக தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் சமீப காலமாக புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்கள் பெங்களூர் அலுவலகத்தை மற்ற நகரங்களுக்கு மாற்றி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அரசு பெங்களூரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைப்பது தான் சரியான தீர்வாக இருக்கும் என தீவிரமாக நம்புகிறது. மேலும் இந்த பிரச்சனைகளை வேகமாகவும், சிறப்பாகவும் தீர்க்கப்பட வேண்டும் என முடிவு செய்து சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் நகர நிர்வாக முறையில் பெரும் மாற்றத்தை அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு நகரின் நிர்வாக முறையில் புரட்சிகரமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்து, பெருஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே (BBMP) அமைப்பை செப்டம்பர் 2 முதல் ஐந்து தனித்தனி மாநகராட்சி நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
இந்த புதிய அமைப்பு, பெங்களூர் நகர நிர்வாகத்தை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். இந்த மாற்றம், நகரின் வளர்ச்சியை வேகப்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.
புதிய நகராட்சி முறையின் தொடக்கம்:
பெங்களூரு நகரின் நிர்வாகத்தை தலைகீழாக மாற்றும் வகையில், செப்டம்பர் 2 முதல் BBMP கட்டமைப்பு முழுமையாக நீக்கப்பட்டு, கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி (GBA) அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய அமைப்பின் கீழ், பெங்களூரு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு தனித்தனி மாநகராட்சி நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாநகராட்சியும் ஒரு ஆணையரால் தலைமையேற்று நிர்வாகம் செய்யப்படும். இந்த ஐந்து மாநகராட்சிகளின் கீழ் பெங்களூரின் 712 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலமும், சுமார் 85 லட்சம் மக்களுக்கு சேவை வழங்கும். இந்த மாற்றத்திற்கான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2 மண்டல முறை தொடரும்:
பெங்களூரு விவகாரங்களைக் கவனிக்கும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், இந்த புதிய அமைப்பு நகர நிர்வாகம் குறித்து கூறுகையில், ஒவ்வொரு மாநகராட்சியும் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இது தற்போதைய பிபிஎம்பி நிர்வாக முறையில் இருப்பது போலவே செயல்படும் என விளக்கினார்.
தற்போதைய பிபிஎம்பி முறையில், ஒரே நிர்வாக அமைப்பு முழு நகரத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது. இது பல சமயங்களில் தாமதமான முடிவெடுப்பு மற்றும் செயல்படுத்தலில் தொய்வு என பல பிரச்சனைகள் இருந்து வருகிறது.
ஆனால், ஐந்து தனித்தனி மாநகராட்சிகளின் மூலம், ஒவ்வொரு பகுதியின் தனித்துவமான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியும். இது, உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலைப் பராமரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் பொது சேவைகளை மேம்படுத்த முடியும்.
"பெங்களூரு ஒரு புதிய நிர்வாக யுகத்தை நோக்கி பயணிக்கிறது. இந்தப் புதிய மாநகராட்சிகள் மூலம், நகரின் வளர்ச்சி வேகப்படுத்தும், மக்களின் வாழ்க்கை முறை மேம்படும்" என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
பெங்களூரின் எதிர்காலம்:
கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டியின் கீழ் இந்த மாற்றம், பெங்களூருவை இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒரு முன்மாதிரியாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.

5 மண்டலம்:
பெங்களூர் வடக்கு மண்டலம் (158 சதுரகிமீ, 18 லட்சம் மக்கள்):
பயதராயனபுரா, தசரஹள்ளி ( இதில் ஷெட்டிஹள்ளி, மல்லசந்திரா, பகலகுண்டே, டி தசரஹள்ளி ஆகியவை இடம்பெறாது), ஹெப்பால்,
புலகேசினகர் (குஷால் நகர் இடம்பெறாது), ஆர் ஆர் நகர் (ஜாலஹள்ளி, ஜேபி பார், யெஷ்வந்த்பூர் தவிர), சர்வஜ்ஞநகர், யெலஹங்கா
பெங்களூர் மத்திய மண்டலம் (78 சதுரகிமீ, 15 லட்சம் மக்கள்):
சி.வி. ராமன் நகர், சாமராஜ்பேட்டை, சிக் பேட்டை, காந்திநகர், ஷாந்திநகர், சிவாஜிநகர்.
பெங்களூர் கிழக்கு மண்டலம் (168 சதுரகிமீ, 9 லட்சம் மக்கள்):
கேஆர் புரம், மகாதேவபுரா (பெல்லந்தூர் வார்டு தவிர)
பெங்களூர் தெற்கு மண்டலம் (147 சதுரகிமீ, 17 லட்சம் மக்கள்):
பிடிஎம் லேஅவுட், பெங்களூர் தெற்கு, பொம்மனஹள்ளி, ஜெயாநகர்,
மகாதேவபுரம் (பெல்லந்தூரின் ஒரு பகுதி), பத்மநாபநகர் (பனசங்கரி கோவில், குமாரசாமி லேஅவுட், பத்மநாபநகர், சிக்கல்சன்றா), ஆர் ஆர் நகர் (ஆர் ஆர் நகர் வார்டு), யெஷ்வந்த்பூர் (ஹெம்மிகேபுராவின் ஒரு பகுதி)
பெங்களூர் மேற்கு மண்டலம் (161 சதுரகிமீ, 26 லட்சம் மக்கள்):
பசவனகுடி, தசரஹள்ளி (சொக்காசந்திரா, பி.ஐ.ஏ, ராஜகோபாலநகர், பீனிய தொழில்துறை), கோவிந்தராஜ நகர், மகாலக்ஷ்மி லேஅவுட், மல்லேஷ்வரம், பத்மநாபநகர் (ஹோசகெரெஹள்ளி, கணேஷ் கோயில், காரி சந்திரா, யேடியூர்), ராஜாஜி நகர், ஆர் ஆர் நகர் (எச்எம்டி, லக்ஷ்மீதேவிநகர், லக்வேர், கொட்டெகேபாள்யா, ஞானபாரதி, ஆர் ஆர் நகர் வார்டு), விஜய நகர்.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications