அரசு பஸ்களில் பயணம் செய்யும்போதெல்லாம் எப்போதுமே கண்டக்டருடன் பாக்கிச் சில்லறைக்காக பயணிகள் போராடுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் சில்லறையை சர்வசாதாரணமாக சில கண்டக்டர்கள் ஏப்பம் விட்டு விடுவர். சிலர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பலர் இதை வைத்து பெரிய தகராறே செய்து விடுவார்கள். இதேவேளையில் பயணிகளை நினைவில் வைத்து சில்லறை கொடுக்கும் பல கண்டக்டர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் பெங்களூரில் ஒரு அரசு பஸ் கண்டக்டர் பாக்கி ரூ.5ஐ தராததற்காக ரொம்பவே கொந்தளித்து விட்டார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட நிதின் கிருஷ்ணா என்ற அந்த பயணி, தனது பெங்களூரு சிட்டி பஸ் டிக்கெட்டை வெளியிட்டுள்ளார். ரூ.15க்கான டிக்கெட் அது.

அந்தப் பதிவில் நிதின் கிருஷ்ணா, நான் 5 ரூபாயை இழந்து விட்டேன். அந்த பஸ்ஸின் கண்டக்டர் தன்னிடம் ஒரு ரூபாய் கூட சில்லறை இல்லை என்று கூறிவிட்டார். இதற்கு ஒரு தீர்வே இல்லையா என்று குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 5 ரூபாய் என்று பார்த்தால் அது மிகவும் சிறிய தொகையாக இருக்கும். இதுவே ஐந்து ஐந்து என்று ஐந்து லட்சம் ஐந்து ரூபாய் என்றால் சற்று நினைத்துப் பாருங்கள். ரொம்பவே பெரிய கொள்ளைதானே! அரசு பஸ் கண்டக்டர்களின் இந்த நடவடிக்கை கோபத்தை ஏற்படுத்துவதாக நிதின் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இதையே ஒரு பழக்கமாக அவர்கள் வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் அதிக சம்பாத்தியம் பார்க்க நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மற்றொரு பதிவில் நிதின் கிருஷ்ணா, கண்டக்டர்கள் தங்களது டிரிப்பைத் தொடங்கு முன்னர் போதிய சில்லறையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதற்கு மாற்றாக வேறு ஆன்லைன் பேமென்ட் ஆப்ஷன்களைத் தரவேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படி என் பணத்தை இழக்க முடியுமா? கண்டக்டர்கள் இப்படி செய்து கேவலமாகப் பணம் சம்பாதிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து விட்டன. ஒருவர், அரசு பஸ்களில் பயணிக்கும்போது சரியான சில்லறையை வைத்தருந்தால் இதுபோன்ற அநாவசிய பிரச்னைகள் ஏற்படாது. இதனால் மக்களுக்கும் கண்டக்டர்களுக்கும் பிரச்னை ஏற்படாது என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் யூபிஐ மூலம் பணம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான்-ஏசி அரசு பஸ்களில் ஆன்லைன் பேமென்ட் சர்வீஸ் கிடையாது. மற்றொரு பதிவர், சகோதரா இதுபோன்று செய்து கண்டக்டர்கள் கூடுதல் பணம் சம்பாதிக்கின்றனர். ஓலா, ஊபர்களில் கூட இப்படித்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
வேறு ஒரு பதிவர், பிஎம்டிசியும் கேஎஸ்ஆர்டிசியும் டிக்கெட் கட்டணத்துக்காக ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications