பஸ்ஸில் வேலைக்கு போகும் பெங்களூரு CEO.. ரூ.6 பேருந்து கட்டணத்தை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

தங்களிடம் போதிய வசதி இருந்தும் சில தலைமை நிர்வாக அதிகாரிகள் எளிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பல பதிவுகளில் பார்த்தோம். அப்படித்தான் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முழங்கால் வலி காரணமாக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இவர் வழக்கமாக நடந்து தான் அலுவலகத்திற்கு செல்வாராம்.

தான் ஏறிய இடத்திலிருந்து அலுவலகம் செல்வதற்கு அவருக்கு 6 ரூபாய் செலவாகியுள்ளது. இந்த கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி தாங்க வில்லை. தனது X பதிவில்.. அந்த CEO இதுகுறித்து பகிர்ந்திருக்கிறார். போர்ட் போலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனமான கேப்பிட்டல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான தீபக் ஷெனாய், "நான் இன்று 6 ரூபாய்க்கு பேருந்தில் அலுவலகத்திற்குச் சென்றேன். அதன் பிறகு 30 நிமிடங்கள் நடந்து சென்றேன். இன்னும் 6 ரூபாய்க்கு சில விஷயங்கள் கிடைப்பது எனக்கு திகைப்பாக இருக்கிறது", என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

பஸ்ஸில் வேலைக்கு போகும் பெங்களூரு CEO.. ரூ.6 பேருந்து கட்டணத்தை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

அதோடு பேருந்தில் யுபிஐ மற்றும் QR கோடு ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தான் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சில பேருந்துகளில் ஏர் கண்டிஷனிங் வசதிகள் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்.

தீபக்கின் பதிவு விரைவில் பிரபலமடையத் தொடங்கியது. இந்தியாவின் பொது போக்குவரத்து நிலை குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர். பல பயனர்கள் தனியார் வாகனங்களுக்கு பதிலாக பேருந்துகளை ஆதரித்து போஸ்ட் செய்ததற்காக தீபக்கிற்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரம் மலிவு விலை மட்டும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்குமா? என்ற கோணத்தில் பலர் தங்களுடைய கமெண்ட்களை முன் வைத்தனர்.

"பொது போக்குவரத்து சரியாக இருந்தால் இந்தியர்கள் பயணம் செய்யும் முறையே மாறிவிடும். பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் மலிவு விலை இவை மூன்றும் தான் பொது போக்குவரத்தின் முக்கியமான அம்சங்களாக இருக்க வேண்டும். டெல்லி மெட்ரோ இவை அனைத்தையும் கொண்டு தனித்து நிற்கிறது", என்று ஒரு பயனர் கமெண்ட் செய்திருந்தார்.

"மற்றொரு பயனர் பொது போக்குவரத்து குறித்து நீங்கள் கூறியிருப்பது சுவாரசியமாக உள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இவைதான் பெரிதும் உதவி வருகிறது. பொது போக்குவரத்து உள்ளூர் மக்களானாலும் சரி.. புலம்பெயர்ந்தோருக்கும் சரி உயிர் நாடியாக விளங்கி வருகிறது" என்று மற்றொரு பயனர் கமெண்ட் செய்திருந்தார். வேறொரு X பயனர் பொது போக்குவரத்தை பாராட்டி.. நல்ல விஷயங்களுக்கு அதிகம் செலவாகாது என்று கமெண்ட் செய்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+