செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவன உரிமையாளர் சாட்ஜிபிடியின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சிறப்பு குறித்த ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பாக சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்த விவாதத்தை இவருடைய பதிவு எழுப்பியுள்ளது. கேபிடல் மைண்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தான் தீபக் செனாய் இவர் சாட்ஜிபிடி இடம் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை வழங்கி அது தொடர்பான பார்வையை பெற்றிருக்கிறார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள தீபக் செனாய் என்னுடைய எம் ஆர் ஐ ரிப்போர்ட்டை நான் சாட் ஜிபிடி இடம் கொடுத்து அதை அனலைஸ் செய்து அதன் பார்வையை கொடுக்கச் சொன்னேன்.
நீங்கள் மிக தீவிரமாக ஸ்குவாட் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளது .நானே தற்போது அதைத்தான் செய்து வருகிறேன் .அதற்கேற்ற வகையில் பொருத்தமான பதிலை சாட் ஜிபிடி வழங்கி இருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு ஒரு பயனர் சாட்ஜிபிடி ஏன் இவ்வாறு கூறியது என உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வி எழுப்பியதற்கு என்னுடைய கால் முட்டியில் சிறிய பிரச்சினை உள்ளது கூடிய விரைவில் நான் இது தொடர்பாக மருத்துவரை பார்க்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை நாம் அன்றாட வாழ்க்கையிலும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மருத்துவ ரீதியிலான பார்வைகளையும் பெறுவதற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மருத்துவ ரீதியிலான திறன் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பு ஒரு முறையும் வெளிவந்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணி எலான் மாஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான கிராக் என்ற சாட் பாட் மருத்துவர்கள் கண்டறிய தவறிய ஒரு எலும்பு முறிவை கிராக் செயலி சரியாக கண்டறிந்து கூறியது என தெரிவித்திருந்தார். என்னுடைய மகள் அண்மையில் ஒரு தீவிரமான கார் விபத்தில் சிக்கிக்கொண்டார்.
விபத்தில் இருந்து மீண்டு வந்த அவர் படிப்படியாக நடக்க தொடங்கிவிட்டார். ஆனால் அவருக்கு திடீரென கைகளில் கடுமையான வலி ஏற்பட்டது. நாங்கள் மருத்துவரிடம் சென்றோம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தனர் ஆனால் அதில் எந்த ஒரு எலும்பு முறிவும் ஏற்படவில்லை எனக் கூறினர் .
இருந்தாலும் என் மகளுக்கு தீவிரமான அறிகுறிகள் தென்பட்டன, அவருடைய கை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்தது. சில நாட்களில் அவரால் அவருடைய கைவிரல்களை அசைக்கக்கூட முடியவில்லை. இதனை அடுத்து நான் கிராக் என்ற ஏஐ செயலியிடம் என் மகளின் நிலைமையை விவரித்து அவருக்கு எடுத்த எக்ஸ் ரேவை பதிவு செய்ததேன். அது என்னுடைய மகளுக்கு எலும்பு முறிவு இருப்பதை காட்டியிருந்தது என கூறினார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications