பெங்களூர்: டாக்சி பயணங்களின்போது பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், சில சமயங்களில் டிரைவர்களின் அஜாக்ரதை சிலரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு சம்பவம் தான் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பேஸ்ட்ரி ஷெஃப் ஜூனி டானுக்கு அண்மையில் நடந்துள்ளது. உபர் டாக்சியில் பயணம் செய்த அவரது அனுபவம் குறித்த டான் பகிர்ந்துள்ளார். அதன் விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெங்களூரைச் சேர்ந்த பேஸ்ட்ரி செஃப், ஜூனி டான் சமீபத்தில் தனது விரும்பத்தகாத உபெர் அனுபவத்தையும் அசௌகரியத்தையும் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். ஏனெனில் பயணம் முழுவதும் ஓட்டுநர் அழைப்பில் இருந்துள்ளர். டிரைவரின் தொடர்ச்சியான பேச்சு காரணமாக, டானுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை அதிகமாக பயன்படுத்தியதாக டிரைவர் மீது ஜூனி டான் புகார் அளித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் இந்த சம்பவத்தை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜூனி டானின் ஸ்டோரி வெறும் அசௌகரியத்தைப் பற்றி மட்டுமல்லாமல், சாலை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. "உபர் டிரைவர் தொடர்ந்து ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுவதை கேட்டு எனக்கு தலைவலி வந்துவிட்டது" என்று அவர் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது ஃபோன் பயன்படுத்துவது பயணிகள் மற்றும் பிற சாலை பயன்படுத்துவோரை ஆபத்துக்குள்ளாக்குகிறது. இது போன்ற செயல்களை தடுக்க உபர் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தனது அசௌகரியத்தை ஜூனி டான் உடனடியாக உபர் நிறுவனத்திடம் புகாராக பதிவு செய்தார்.
ஜூனி டான் புகாரை அடுத்து, உபர் நிறுவனம் அடுத்த நாளே அவரிடம் தொடர்புகொண்டு, இந்தப் பிரச்சனையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது. மேலும், குறிப்பிட்ட டிரைவரின் கணக்கை மீண்டும் பரிசீலனை செய்வதாகவும், எதிர்காலத்தில் ஜூனி டானுக்கு இந்த டிரைவர் ஒதுக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் உபர் நிறுவனம் எடுத்த நடவடிக்கை உண்மையான தீர்வாக இருக்குமா என்பது குறித்து ஜூனி டான் சந்தேகம் தெரிவித்தாலும், இது போன்ற புகார்கள் மூலமாகவே பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications