தென்னிந்தியாவின் பிரதான நகரங்களாக சென்னை மற்றும் பெங்களூர் இருக்கின்றன. சென்னை உற்பத்திக்கான மையமாகவும் பெங்களூரு ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் திகழ்கிறது. இரண்டு நகரங்களுக்கும் இடையே மக்கள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதிகம்.
தற்போது சென்னை - பெங்களூரு இடையே சாலை மார்க்கமாக பயணம் செய்ய 8 மணி நேரம் ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் தான் மத்திய அரசு சென்னை பெங்களூருவை இணைக்கும் வகையில் விரைவு சாலை அதாவது எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. பல ஆண்டுகளாக சென்னை பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை கட்டுமான பணி முடியவில்லை.

முதல் கட்டமாக 2024 ஆம் ஆண்டிலேயே பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அது 2026 ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டது. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே பொறுத்தவரை மூன்று மாநிலங்களில் பணிகள் நடக்கின்றன. இந்த விரைவுச்சாலை மொத்தம் 263 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகவும் செல்கிறது. கர்நாடகாவில் ஹோஸ்கேட் முதல் கேஜிஎஃப் வரை எக்ஸ்பிரஸ்வே பணிகள் முடிவடைந்து விட்டன. 72 கிலோமீட்டர் நீளத்திற்கு கர்நாடகாவில் சாலை கட்டுமான பணி முடிந்து அங்கே வாகனங்கலே தரப்போது செல்கின்றன. ஆந்திராவைப் பொறுத்தவரை 85 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையில் 92 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இந்த விரைவு சாலை பணிகள் இன்னும் முடிவடையாமலேயே இருக்கின்றன.
இந்த நிலையில் தான் ஒரு நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே பணிகள் தற்போது வேகம் எடுத்திருப்பதாகவும் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வனத்துறை அனுமதி பெறுவது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல், ஒப்பந்ததாரர்களுடன் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் சரி செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலையின் மிக முக்கியமான பகுதியாக அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் இடையிலான சாலை இருக்கிறது. 25 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில் கடந்த 2025 மே மாதத்தில் இருந்து பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் இந்த சாலை முழுவதுமான பயன்பாட்டுக்கு வருவது தடைபட்டுள்ளது. தற்போது அதனை சரி செய்யும் பணிகளை அரசு எடுத்து இருக்கிறது. திட்டமிட்டபடி 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விரைவுச்சாலை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் சென்னை பெங்களூர் இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும் வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சாலையில் பயணம் செய்ய முடியும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications