சென்னை: சென்னை மற்றும் பெங்களூருவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு - சென்னை கிரீன் ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான 262 கிலோமீட்டர் தொலைவை 2.15 மணி நேரங்களிலேயே கடந்து விடலாம். பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் முக்கியமான ஒரு எக்ஸ்பிரஸ்வே திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் குறைவதோடு மட்டுமில்லாமல் சரக்கு போக்குவரத்து மிகவும் எளிதாகிவிடும். பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தென் மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வரக்கூடிய முதல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் வெறும் 2.15 மணி நேரங்களாக குறைந்து விடும். அதேபோல இந்த எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம்.
மிகவும் பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு எக்ஸ்பிரஸ்வேயாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சென்னை பெங்களூர் இண்டஸ்ட்ரியல் காரிடார் வளர்ச்சி பெறும் என்றும், இந்த பகுதிகளில் உற்பத்தி துறை ஆனது வேகமாக வளர்ச்சி காணும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வேயில் லாரிகள் செல்வதற்கு என தனி பாதை, வாகனங்கள் மற்றும் விலங்குகள் பாதசாரிகள் செல்வதற்கு என தனி பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எக்ஸ்பிரஸ்வேயானது சென்னையில் தொடங்கி ஆந்திரப் பிரதேச மாநிலம் வழியாக பெங்களூருக்கு சென்றடைகிறது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வேயானது அமைக்கப்பட்டுள்ளது சென்னை ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, சித்தூர் பங்காரு பள்ளம், பலமனேர் , பங்கார பேட் கோலார் தங்க சுரங்கம், மாலூர் ஆகிய நகரங்களையும் இது இணைக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 18,000 கோடி ரூபாய் செலவில் இந்த எக்ஸ்பிரஸ்வேயை கட்டமைத்து வருகிறது. அடுத்த மாதம் இங்கே வாகன சோதனை ஓட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
story written by: Devika
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications