பெங்களூரில் வசிக்கும் இணை நிறுவனர் ஒருவர் குண்டும் குழியுமாக இருக்கும் இடங்களை மதிப்பாய்வு செய்யக்கூடிய ஒரு அப்ளிகேஷனை உருவாக்க இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவருடைய போஸ்டுக்கு கிரண் மஜும்தார்-ஷா மற்றும் மோகன்தாஸ் பாய் போன்ற வணிகத் தலைவர்கள் உட்பட நகரத்தில் உள்ள மக்கள் தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். பள்ளம் நிறைந்த சாலைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் சிலர் தங்களுடைய விரக்தியை தெரிவித்தனர்.
செலவு மேலாண்மை நிறுவனமான பைலின் இணை நிறுவனரும் CTO-வுமான சிவராமகிருஷ்ணன் நாராயணன் என்பவர், "பெங்களூருவில் உள்ள குழிகளை மதிப்பிட ஒரு அப்ளிகேஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் ஒரு பெரிய குழியைப் பார்த்தேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என்று வருத்தப்பட்டேன். அந்தக் குழிக்குள் யாரெல்லாம் இருக்கிறார்களோ? என்று போஸ்ட் செய்திருந்தார்.

இவர் காமெடியாக போஸ்ட் செய்த பதிவு, வேகமாக பகிரப்பட்டு அதிக அளவிலான லைக்குகள் மற்றும் ஷேர்களை குவித்தது. சிவராமகிருஷ்ணனின் யோசனை நகைச்சுவையாக இருந்தாலும், பலர் அவருடையக் கருத்தை ஆதரித்தனர்.
பலரும் இவருடைய யோசனைக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்ய தொடங்கினர். ஒரு X பயனர் "மாதத்தின் சிறந்த குழி எது" என்பதை கண்டுபிடிக்கும் ஆப்ஷனையும், அது எவ்வாறு வாகனத்தின் டயரை சேதப்படுத்துகிறது என்ற திறனையும் அப்ளிகேஷனில் இணைக்க முடியுமா? என்று பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு X பயனர் ஒவ்வொரு குழிக்கும் ஒரு தனிப்பட்ட ஐடி கொடுங்கள். அந்த நகரத்தின் பின்கோடு, குழியை கண்டுபிடிக்க சீரியல் நம்பர் ஆகியவற்றை பயன்படுத்துங்கள். உதாரணமாக D110001_P00001 என்ற கோடை டெல்லிக்கு பயன்படுத்தலாம். டெல்லியின் பின்கோடு 110001, P என்பது குழியை குறிக்கிறது என்று எழுதியிருந்தார்.
மேலும் பல பயனர்களும் சிவராமகிருஷ்ணனிடம், இந்த அப்ளிகேஷனை நாடு முழுவதும் இல்லாவிட்டாலும் குண்டும் குழியுமாக இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க மற்ற நகரங்களிலும் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த அப்ளிகேஷனை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இங்கு நிறைய குழிகள் மறைக்கப்பட்டுள்ளன என்று ஒரு X பயனர் எழுதியிருந்தார். அப்படியே மும்பையையும் உங்கள் அப்ளிகேஷனில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மற்றொரு X பயனர் எழுதி இருந்தார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை அதிகாரமான மோகன்தாஸ் பாய் கர்நாடகா அரசை கடுமையாக கண்டித்தார். பெங்களூரு வெளி வட்டச் சாலையில் வடிகால் மற்றும் போக்குவரத்து மோசமாக உள்ளது. அப்பகுதியில் அலுவலகங்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த நிறுவனங்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள நகரங்களில் அலுவலகத்தை திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.
பயோகான் நிறுவனரும் தலைவருமான கிரண் மஜும்தார்-ஷா கூட நகரின் சாலைகளின் நிலை குறித்து தனது கவலைகளை சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications