சமீப காலமாக குவிக்காமர்ஸ் தளங்களின் அதிகரிப்பால் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி தான் வாங்கிக் கொள்கின்றனர். இதனால் தெருவோர வியாபாரிகளில் இருந்து அன்றாட பிழைப்புக்காக மளிகை கடைகளை நடத்துபவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் ஆன்லைன் தளங்களில் வழங்கப்படும் தள்ளுபடிகள் தான். இதனால் தங்களுடைய சிறு மளிகை கடைகளை ஆன்லைன் விற்பனைக்கு ஏற்ற டார்க் ஸ்டோர்களாக மாற்றிக் கொள்ளலாமா? என்ற எண்ணத்திலும் சிலர் இருக்கின்றனர்.
ஆனால் அதையும் செய்ய முடியாமல் சில தெருவோர வியாபாரிகள் இன்னமும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தேங்காய் விற்பனையாளர் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடைய விளம்பரம் செப்டோ, பிளிங்கிட், பிக் பாஸ்கெட் போன்ற குவிக் காமர்ஸ் தளங்களுக்கு இடையே உள்ள விலை வித்தியாசத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

தேங்காய் விற்பனையாளரின் விளம்பரத்தில் செப்டோபில் தேங்காய் விலை ரூ.80, பிளிங்கிட்டில் தேங்காய் விலை ரூ.80, பிக் பாஸ்கெட்டில் தேங்காய் விலை ரூ.70. ஆனால் எங்களுடைய விலை வெறும் 55 ரூபாய் என்று ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி இருந்தார்.
இவருடைய விளம்பரம் பீக் பெங்களூரு என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. விரைவு வணிகம் சாலையோர தேங்காய் வியாபாரிகளை பாதிக்குமா? என்ற தலைப்பில்பகிரப்பட்டு இருந்தது. இந்த போஸ்ட் நவம்பர் 7-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 8,000-த்திற்க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது.

தேங்காய் வியாபாரியின் விளம்பரத்திற்கு பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு எக்ஸ் பயனர் தேங்காய்க்கு 50 ரூபாயும் அதிகம் தான். இந்தியாவில் தேங்காய் விலை குறைய வேண்டும் என்றால் மற்ற நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் டெல்லியில் சாலையோரத்தில் விற்பனை செய்பவர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் பிளிங்க்கிட்டில் அதைவிட குறைவாக இருந்ததாகவும் கமெண்ட் செய்திருந்தார்.
இந்த சிறிய விளம்பரம் தெருவோர வியாபாரிகளின் நிலையை எடுத்துக்காட்டியுள்ளது. சமூகத்தை வலுப்படுத்த இது போன்ற வியாபாரிகளிடம் இருந்தும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications