இந்தியாவின் முன்னணி பைக் டாக்சி சேவை நிறுவனமான ரேபிடோ பல எதிர்ப்புகள் மத்தியிலும் தொடர்ந்து தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், இந்தியாவின் டெக் நகரமாக விளங்கும் பெங்களூரில் அதிகப்படியான மக்கள் ரேபிடோ சேவையைப் பயன்படுத்தும் வேளையில் அவ்வப்போது ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும். இதில் சில நெகிழ்வான சம்பவமும் நடக்கும் வேளையில், ஸ்ருதி என்ற பெண் எதிர்கொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூர் மக்கள் அவ்வப்போது தாங்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான கேப் அல்லது டாக்சி பயணத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிடுவது இயல்பு, பிற நகரத்து மக்களும் தங்களது வித்தியாசமான பயண அனுபவத்தைப் பதிவிட்டாலும் எண்ணிக்கையில் பெங்களூர் மக்கள் சற்று அதிகமாக பதிவிடும் வேளையில், ஸ்ருதி என்பவரின் பயணமும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ருதி பாஸ்வா என்ற ஒரு கல்லூரி மாணவி ரேபிடோ டாக்சியைப் புக் செய்துள்ளார், வழக்கமாகப் புக் செய்வது போல் இந்த முறையும் புக் செய்யும் போது, இவருடைய டிரைவராக வந்தது பெரிய நிறுவனத்தில் மேனேஜராகப் பணியாற்றும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவில் பல லட்சம் சம்பளம் வாங்கினாலும் பலர் ரேபிடோ, உபர் போன்ற சேவைகளில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றுகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் நாட்டில் இதுபோன்ற நடப்பது இயல்பான ஒன்று, ஆனால் தற்போது இதே கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி வருகிறது. அப்படித் தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ருதி பாஸ்வா தனது டிவிட்டரில், இது என்னுடைய பீக் பெங்களூர் மொமெண்ட், இன்று என்னைப் பிக்அப் செய்ய வந்த ரேபிடோ கேப்டன் ஒரு பெரிய நிறுவனத்தில் கார்ப்பரேட் மேனேஜர் ஆவார். மலிவான தொகையில் மக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ட்ராப் செய்யும் பணியைச் செய்து வருகிறார். பெங்களூரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இதுவும் உதாரணம் எனத் தெரிவித்தார்.
ஸ்ருதி பாஸ்வா தனது பதிவில் ரேபிடோ நிறுவனத்தை டேக் செய்துள்ள நிலையில், ரேபிடோ இவரது பதிவுக்கும், கேப்டன் குறித்து வார்த்தைகளுக்கு நன்றி கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications