பெங்களூருவை மையமாக கொண்ட ஒரு முன்னணி நிறுவனத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியர்களை துன்புறுத்திய ஒரு இயக்குநருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை, அங்கு பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது செழித்த ஒரு நிறுவனம், புதிய இயக்குநரின் தவறான தலைமையால் எப்படி சீரழிந்தது என்பதை இந்தப் பதிவு கண்முன் நிறுத்துகிறது.
அந்த ஊழியரின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் நிறுவனம் முற்றிலும் ரிமோட் பணியில் (Remote Work) சிறப்பாக செயல்பட்டது. ஊழியர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் இருந்ததோடு, தங்கள் குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியை கண்டனர். Cloud அடிப்படையிலான அமைப்புகளால், நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், நொய்டாவில் இருந்து 'வி' என்று அழைக்கப்பட்ட புதிய மென்பொருள் பொறியியல் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகுதான் நிம்மதி பறிபோனது. சில மாதங்களிலேயே அவர், ஊழியர்கள் விரும்பாத 'ஹைப்ரிட்' பணி முறையை (Hybrid Work Model) கட்டாயப்படுத்தினார். அலுவலகத்திற்கு அருகில் இருந்தவர்கள் கூட இதை தேவையற்ற மற்றும் கவனச்சிதறலை ஏற்படுத்தும் முடிவு என்று கருதினர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ரெடிட் பயனரும் அவருடைய சக ஊழியர் ஒருவரும் மட்டும் ரிமோட் பணியை தொடர அவர்களின் ஆதரவான மேலாளர் அனுமதி அளித்திருந்தார். ஒருமுறை அவர்கள் அலுவலக சந்திப்புக்கு வந்தபோது, இயக்குநர் 'வி'-யின் கேள்விக்குரிய அறிவுரைகளை கேட்க வேண்டியிருந்தது.
அப்போது, 'வி', தனது குழுவினரிடம், வாடிக்கையாளர்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம்" என்று கூறியுள்ளார். மேலும், தாங்கள் பணிபுரியும் இடத்தை ஒரு குடும்பமாக கருத வேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புவதை குறித்து கேள்வி எழுப்பியதுடன், வேலையை விட வேறு எதற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது என்று பேசினார். அவருடைய உணர்ச்சியற்ற பேச்சு குழுவினரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
இதன் விளைவாக, நிறுவனத்தில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய, அனைவராலும் மதிக்கப்பட்ட மூத்த மேலாளர், ராஜினாமா செய்தார். அவர் வெளியேறிய பிறகு, நிலைமை மேலும் மோசமானது. 'வி', தனக்கு விசுவாசமானவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார். அவர்கள் ஊழியர்களின் ஒவ்வொரு செயலையும் மிக நுணுக்கமாக கண்காணிக்கும் முறைகளை அமல்படுத்தினர். ஊழியர்கள் ஒவ்வொரு மணி நேரத்தையும் 'JIRA' டாஸ்க்குகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த அழுத்தமான சூழலால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் மிக கடுமையாக சரிந்தது. திறமையான ஊழியர்கள் பலர் வேலையை விட்டு வெளியேறினர், முக்கியத் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன. விடுப்பில் சென்றிருந்த இந்த ரெடிட் பயனர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தபோது, சக ஊழியர்கள் மற்றும் முன்னாள் மேலாளரின் முகம் சோர்வடைந்து, மன அழுத்தத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஊழியர்களை துன்புறுத்திய இயக்குநர் 'வி' இறுதியாக பதவியில் இருந்து நீக்கப்படவிருப்பதை அந்த ஊழியர் அறிந்தார். அவர் 3 மாதங்களில் பதவி மாற்றம் செய்யப்படுவார் என்று politely கூறப்பட்டாலும், அது வேலைநீக்கத்தை குறிப்பதாகவே கருதப்பட்டது. ஒரு காலத்தில் வேலையே குடும்பம் என்று உபதேசம் செய்தவர், அதே குடும்பத்தால் இப்போது வெளியேற்றப்பட்ட ironic-ஐ எண்ணி அந்த ஊழியர், 'கர்மா தன் வேலையைச் செய்துவிட்டது' என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications