பெங்களூரு ரியல் எஸ்டேட் துறைக்கு கடும் நெருக்கடி..!! தமிழ்நாடு அரசு எடுத்த அந்த ஒரு நடவடிக்கை தான் காரணமா?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு எடுத்த ஒரு நடவடிக்கையே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த கட்டுமான செலவுகள் சுமார் 33% உயர்ந்துள்ளன. மேலும் ரியல் எஸ்டேட் சந்தையும் மந்தமாக இருப்பதால் பில்டர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. மணல் , ஜல்லி போன்ற மிக முக்கியமான கட்டுமான பொருட்களுக்கு பெங்களூருவில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு ரியல் எஸ்டேட் துறைக்கு கடும் நெருக்கடி..!! தமிழ்நாடு அரசு எடுத்த அந்த ஒரு நடவடிக்கை தான் காரணமா?

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை மாநிலங்களுக்கு இடையேயான லாரிகளில் ஏற்றி செல்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு வரும் ஜனவரி 26 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முறைகேடான முறையில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதையும், அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்குள்ளேயே கட்டுமான பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read

கர்நாடகா மற்றும் குறிப்பாக பெங்களூருவின் பல பகுதிகளுக்கு தேவையான கட்டுமான கற்கள் மற்றும் கனிம பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் அதிகளவில் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்த தடை உத்தரவு காரணமாக, பெங்களூருவில் கட்டுமான பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் பல முன்னணி ரியல் எஸ்டேட் திட்டங்களும், பெங்களூரு மெட்ரோவின் 'புளூ லைன்' போன்ற மிக முக்கியமான உள்கட்டமைப்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து வரும் பொருட்கள் தடைபட்டதால், மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், பெங்களூருவில் ஒட்டுமொத்த கட்டுமான செலவு 33% அளவுக்கு உயர்ந்துள்ளது என Bangalore Realtors Association India தலைவர் ஃபரூக் கூறியுள்ளார். ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு 400 ரூபாய் வரை உயரும் என குறிப்பிடுகிறார்.

Recommended For You

ஏற்கனவே ரியல் எஸ்டேட் மந்தமாக இருப்பதால், பில்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விலையை அதிகரிக்கவும் முடியாமல், தாங்களே செலவை ஏற்கவும் முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர் என்கிறார்.CREDAI அமைப்பின் கர்நாடக தலைவர் பாஸ்கர் டி. நாகேந்திரப்பா ஈரான் போர் காரணமாக கட்டுமான செலவுகள் ஆரம்பத்தில் உயர்ந்தன; இப்போது ஏற்பட்டுள்ள புதிய தடைகளும் கட்டுப்பாடுகளும் அந்த விலை உயர்வை மேலும் தீவிரமாக்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.

கட்டுமான பொருட்கள் கிடைக்காததால், பணிகள் பெருமளவில் தாமதமாகின்றன. இது திட்டமிட்ட நேரத்தில் வீடுகளை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். தமிழ்நாடு அரசுடன் பேசி கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பில்டர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+