ஸ்மார்ட் போன் உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒன்பிளஸ் மீது வாடிக்கையாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு வாடிக்கையாளர் புதிய ஸ்மார்ட்போன் வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு யூசர் மேனுவல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு 5000 ரூபாய் அபராதம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அனைத்து சேவை வழங்கும் நிறுவனங்களும் வாடிக்கையாளர் திருப்தியை கட்டாயம் சரி செய்ய வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நார்த் பெங்களூரின் சஞ்சய் நகரில் வசிக்கும் எஸ்.எம்.ரமேஷ் "ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3" என்ற மொபைலை வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு யூசர் மேனுவல் வழங்கப்படவில்லை. இதை தெரிந்து கொண்டு 6 மாதங்களுக்குப் பிறகு சஞ்சய் நுகர்வோர் குறைதீர் தளத்தில் புகார் அளித்தார்.

சஞ்சய் இந்த ஸ்மார்ட்போனை ரூ.24,598-க்கு வாங்கியுள்ளார். அதன் பிறகு மொபைலில் உத்தரவாதம் குறித்த தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் முகவரியை கண்டுபிடிக்க அவருக்கு யூசர் மேனுவல் வழங்கப்படவில்லை. இதனால் சஞ்சய் மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் அவருக்கு ஒரு யூசர் மேனுவல் வழங்கப்பட்டிருந்தாலும், மொபைல் போனை வாங்கிய 4 மாதங்களுக்குப் பிறகுதான் சேவையில் குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளார். இதனால் ஜூன் மாதம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி தீர்வு பெற முடிவு செய்தார்.
நுகர்வோக் குறைதீர் டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ஒன் பிளஸ் நிறுவனத்திடம் "அலட்சியம்" என்று கூறி 5000 ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்வீடிஷ் ஹோம் பர்னிஷிங் நிறுவனமான IKEA நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பெண் அந்நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய கேரிபேக்கிற்க்கு ரூ.20 வசூலித்ததற்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.3,000 ரூபாய் அபராதம் வழங்க உத்தரவிட்டது.
நாகசந்திராவில் உள்ள ஷோரூமுக்கு சென்ற ஒருவரிடம் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஒரு வருடம் கழித்து நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் இருந்து அபராதம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கேரி பேக்கிற்-க்கு வசூலிக்கப்பட்ட 20 ரூபாயை வட்டியுடன் திருப்பி தரவும், இழப்பீடாக 1000 ரூபாய் மற்றும் நீதிமன்ற செலவுக்காக கூடுதல் 2,000 ரூபாய் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் IKEA-வுக்கு உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications