பெங்களூர்: வாழ்க்கைல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு ஆனா இந்த தம்பதியோட பிரச்னையை கேட்டிங்கனா நீங்க எல்லாம் அதிர்ச்சி ஆயிடுவீங்க. இவங்க மாசம் 7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறாங்க, ஆனா அந்த பணத்த என்ன பண்றதுனு தெரியலயாம்.
கிரேப்வைன் (grapevine) என்பது இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்கள் தங்களுடைய ஊதியம், வேலை மற்றும் நிதி சார்ந்த விவரங்களை பகிரக் கூடிய ஒரு செயலி ஆகும். இந்த செயலியில் பெங்களூர்வை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களின் பிரச்சனை பற்றி பகிர்ந்துள்ளனர். அது தான் கிரேப்வைனில் பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

ஒரு இளைஞர், "நானும் என் மனைவியும் மென்பொருள் பொறியாளராக பெங்களூர்வில் வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. நாங்கள் மொத்தமாக 7 லட்சம் ரூபாய் மாதம் சம்பளம் பெறுகிறோம். அதில் செலவு, சேமிப்பு உள்ளிட்டவை போனால் மாதம் 3 லட்சம் ரூபாய் மீதமாகிறது. இந்த பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை" என கூறியுள்ளார்.
வரி பிடித்தம் போக மாதம் 7 லட்சம் ஊதியம் அதில் 2 லட்சம் மியுச்சுவல் ஃபண்டு முதலீடு, மற்ற செலவுகள் 1.2 லட்சம் என அனைத்தும் போக மீதம் 3 லட்சம் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
கிரேப்வைன் தளத்தில் இவரது பதிவை பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர். செலவு, சேமிப்பு போக மாதம் 3 லட்சம் மீதமாகிறதா? என்னங்க சொல்றீங்க என பலர் கேட்டுள்ளனர்.
சிலரை உங்கள் குழந்தையாக எங்களை தத்தெடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். 200க்கும் அதிகமானவர்கள் இதில் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு நபர் எனக்கு கொடுங்கள்,என்னுடைய ஊதியம் எனக்கு போதவில்லை என கூறியுள்ளார்.
சில பயனர்கள் அடிக்கடி சுற்றுலாவுக்கு சென்று வாருங்கள், உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள் என கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாமே என பரிந்துரை செய்துள்ளனர்.
ஒரு வீட்டினை வாங்கி அதனை Airbnbஇல் போட்டால் இரண்டாவதாக ஒரு வருமானம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். சிலர் அந்த பணத்தை ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கி உதவுமாறு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications