IT வேலையை விட்டுவிட்டு உணவுத் தொழிலில் குதித்த தம்பதியினர்! 9 மாதங்களில் ரூ.56 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை!

ஐடி வேலையில் இருக்கும் பலர் அங்குள்ள ஸ்ட்ரெஸ் தாங்காமல் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று கூறுவதைக் கேட்டிருப்போம். இதே எண்ணம் தான் தியா கிருஷ்ணகுமார் மற்றும் ஆதித்ய நடராஜனுக்கு ஏற்பட்டது. ஐடி துறையில் பணிபுரிந்தாலும் சொந்தமாக உணவுத் தொழில் தொடங்க வேண்டும் என்பது இவர்களுடைய ஆசை.

பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பலர் சமைப்பதற்கு நேரமில்லாத காரணத்தினால் வெளியில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதே நிலை தான் இந்த தம்பதியினருக்கும். இவர்களும் மீல் சப்ஸ்கிரிப்ஷன் சேவை வழங்கும் உணவகங்களில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தனர்.

IT வேலையை விட்டுவிட்டு உணவுத் தொழிலில் குதித்த தம்பதியினர்! 9 மாதங்களில் ரூ.56 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை!

மீல் சப்ஸ்கிரிப்ஷன் சேவை என்பது மாதாந்திர வாடகையை போன்றது. குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்தி விட வேண்டும். அதற்கான உணவை பணிபுரியும் அலுவலகத்திற்கு டோர் டெலிவரி செய்து விடுவார்கள். இப்படி வாங்கும் உணவு எதுவும் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் பெங்களூரில் ஒரு உணவகம் தொடங்க முடிவு செய்தனர்.

தொழில் தொடங்க வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது?: தியாவும், ஆதித்யாவும் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய இவர்களுக்கு வீட்டில் சமைத்து சாப்பிட நேரமில்லை. பணி சுமை காரணமாக வெளியில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தனர்.

Also Read

சில நேரங்களில் தியா 20 நிமிடத்தில் சமைத்து விடலாம் என்று இன்டர்நெட்டில் சொல்லப்படும் ரெசிபியை வீட்டில் சமைத்திருக்கிறார். ஆனால் அதற்கும் அதிக நேரம் எடுத்துள்ளது. நாள் முழுவதும் அலுவலகத்தில் மன அழுத்தத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து சமையல் செய்வது அவருக்கு இன்னும் கடினமான விஷயமாக இருந்தது.

இதனால் மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு சமைத்து வழங்கும் சேவைகளை தேடியுள்ளனர். அப்படி தேடியும் அவர்களுக்கு பருப்பு, காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான வீட்டு உணவு கிடைக்கவில்லை. எனவே மலிவு விலையில் தாங்களே ஆரோக்கியமான வீட்டு உணவை சமைத்து வழங்க முடிவு செய்தனர். இதனால் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களுடைய சொந்த சேமிப்பிலிருந்து 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வெல்ஃபெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

தொடக்கத்தில் ஆதித்யா, தியா, ஒரு ஊட்டச்சத்து நிபுணர், ஒரு சமையல்காரர், ஒரு உதவியாளர், ஒரே ஒரு டோர் டெலிவரி ஊழியர் என ஆறு பேர் மட்டுமே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். ஊட்டச்சத்து நிபுணர் உணவுகளின் சத்துக்களை கணக்கிட்டு மெனுவை வடிவமைத்தார். மற்றவர்கள் சமையல், வினியோகம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு உணவுகளை அனுப்பி வைத்து அவர்களிடம் ஃபீட்பேக் கேட்டு தெரிந்து கொண்டனர்.

உணவை சாப்பிட்ட எல்லோரும் பாசிட்டிவான ஃபீட்பேக் கொடுத்தனர். தற்போது வெல்ஃபேட் மெனுவில் பருப்பு, ஆலு கோபி, சோள ரொட்டி, இஞ்சி சிக்கன் வறுவல், சென்னா சேட் போன்ற உணவுகள் உள்ளன. பன்னீர்,சோயா, சிக்கன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் விற்பனை செய்கின்றனர்.

மாறுபட்ட சுவையை விரும்பும் நபர்களுக்கு ரேப், பிரியாணி, இண்டோ சைனீஸ் உணவுகளும் உள்ளன. ஆரம்பத்தில் பிசினஸ் செய்பவர்களைப் போலவே இவர்களுக்கும் சில தடுமாற்றம் இருந்தது. ஆனால் பெங்களூரை சேர்ந்த ஒரு ஊட்டச்சத்து நிபுணர் வெல்ஃபெட் ஹோட்டலுக்கு சென்று இணையதளத்தில் பதிவிட்ட ஒரு ரீல் இவர்களுடைய பிசினஸ்க்கு திருப்புமுறையாக அமைந்தது. அதன் மூலம் 100 வாடிக்கையாளர்கள் வரை கிடைத்தனர். வழக்கமாக உணவு டெலிவரி பார்சல்களைப் போல பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாமல்.. மகாராஷ்டிராவில் இருந்து உட்புறம் ஸ்டீல் பூச்சிக் கொண்ட ரீயூசபில் லஞ்ச் பாக்ஸ்களை வாங்கினர்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ததால் வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரித்தது. முதல் ஆண்டிலேயே நல்ல வருமானமும் கிடைத்தது. முதல் ஆண்டில் வெல்ஃபெட் நிறுவனத்தின் வருவாய் ரூ.45 லட்சம். 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.56 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இன்று வரையில் இந்த உணவகத்தில் 1500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 55,000-த்திற்கும் மேற்பட்ட உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மூன்று நாட்களுக்கான ட்ரையல் பிளானும் அடங்கும். ஒருவேளை உணவு ரூ.289 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+