பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளம் தம்பதி, ஆகஸ்ட் மாதத்தில் தாங்கள் செலவு செய்த ரூ.5,90,000 பட்ஜெட் குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டது, இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவைக் கண்ட பலரும், இது என்னுடைய ஓராண்டு வருமானம் என்றும், இவ்வளவு பணத்தை ஒரு மாதத்தில் எப்படிச் செலவு செய்வீர்கள்? என்றும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பயண சாகசங்களை அதிகம் பகிரும் பிரகிருதி மற்றும் ஆஷிஷ் அரோரா என்ற அந்தத் தம்பதியினர், தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் வாழ்க்கை முறை, பயணங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதச் செலவுகளையும் அவர்கள் விரிவாகப் பட்டியலிட்டனர்: வாடகை: ரூ.42,000
உடற்பயிற்சி (ஜிம்): ரூ.40,000
மளிகைச் சாமான்கள்: ரூ.20,000
பயன்பாட்டுச் செலவுகள்: ரூ.10,000
வெளியே சாப்பிடுதல்: ரூ.13,000
பிற செலவுகள்: ரூ.15,000
முதலீடுகள்: ரூ.1,00,000
பயணச் செலவுகள்: பட்ஜெட்டின் பெரும்பகுதி
இந்த மொத்த செலவில், ரூ.3,50,000 ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு உள்நாட்டு மற்றும் இரண்டு சர்வதேச பயணங்களுக்கான ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட்டுகளுக்காக ஒதுக்கப்பட்டது என்று அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர். இதுவே அவர்களின் மொத்த செலவில் பெரும் பங்காக உள்ளது.
இந்தத் தம்பதியினர், பணம் மற்றும் முதலீடுகள் குறித்து வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். "நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மட்டும் வாழவில்லை, அவர்களுடன் ஒரு வாழ்க்கையையும் கட்டமைக்கிறீர்கள். பல கடினமான விஷயங்களைப் பற்றிப் பேசுவது அவசியம். அதனால், நாங்கள் ஒவ்வொரு மாதமும் கூடி, எங்கள் செலவுகளை மதிப்பாய்வு செய்து, முதலீடுகளுக்குப் பணம் ஒதுக்கி, எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிக்கிறோம். இது எளிதானதல்ல, ஆனால் அவசியம் என்று அவர்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதும், பல தரப்பட்ட கருத்துகள் குவிந்தன. பெரும்பாலான பயனர்கள், தம்பதியரின் மாதச் செலவைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
ஒருவர், அவர்கள் ஒரு மாதத்தில் செலவழிப்பது என்னுடைய ஓராண்டு வருமானம்" என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், அவர்கள் ஒரு மாதத்தில் செலவழிப்பது எங்களுடைய ஓராண்டு வருமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலர், உடற்பயிற்சிக்காக ரூ.40,000, வெளியே சாப்பிட ரூ.13,000 செலவழிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ரூ.13,000 என்பது வெளியே சாப்பிடுவதற்கு மட்டும் இல்லை. அதில் ரூ.8,000 உணவை ஆர்டர் செய்வதற்கும், ரூ.5,000 வெளியே டேட்டிங் செல்வதற்கும் செலவு செய்யப்பட்டது என்று அந்தத் தம்பதியினர் விளக்கம் அளித்தனர்.
அவர்களின் பிரம்மாண்டமான பயணச் செலவுகள் குறித்து கேள்வி கேட்ட மற்றொரு பயனருக்கு, "கடந்த ஆண்டு பயணத்திற்காக மட்டும் சுமார் ரூ.20 லட்சம் செலவிட்டோம். நாங்கள் வீட்டிலேயே தங்கியது மிகக் குறைவு. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்வதுதான் பயணம். நாம் எவ்வளவு அதிகமாகப் பயணிக்கிறோமோ, அவ்வளவு வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன என்று அந்தத் தம்பதியினர் பதிலளித்தனர்.
இந்தச் சம்பவம், ஒரு சிலரின் வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு எவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் என்பதையும், நிதி மேலாண்மையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளையும் வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications