பெங்களூர்: கடன் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகளில் இருந்து நம்மில் பலருக்கும் தேவையற்ற அழைப்புகள் வந்திருக்கலாம். இந்த எரிச்சலூட்டும் அழைப்புகள் உண்மையில் நம்மை தொந்தரவு செய்யக்கூடியவை என்பது தான் எல்லோருடைய கருத்தும்.
நம்மில் பலரைப் போலவே, பெங்களூருவில் வசிக்கும் ஒரு மருத்துவர் பல ஸ்பேம் நம்பர்களை ப்ளாக் செய்து சோர்வடைந்துள்ளார், ஆனால் நம்பர்களை பிளாக் செய்வது அவருக்கு உதவவில்லை. அவருக்கு அதிக ஸ்பேம் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.

குறிப்பாக HDFC வங்கியின் லோன் டீமில் இருந்து டாக்டருக்கு அதிக ஸ்பேம் கால்கள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த சுந்தர் சங்கரன் என்ற மருத்துவர், தனது X கணக்கில் (ட்விட்டர்), HDFC வங்கியிலிருந்து தேவையற்ற அழைப்புகள் வருவதைப் பற்றிய தனது விரக்தியைப் பகிர்ந்துள்ளார்.
அவர் இந்த அழைப்புகளை ஒரு தொல்லை என்றும், வங்கியை விமர்சித்தார், அதில் அவர் HDFC டீம் என்னை தொந்தரவு செய்கிறார்கள், கால்களை பிளாக் செய்த பிறகும், அவர்கள் தொடர்ந்து என்னை அழைக்கிறார்கள்.
இன்று, எனக்கு அந்த வங்கியில் இருந்து ஒருவர் பேசினார். அவரிடம் நான் காட்டமாக பேசி அழைப்பை துண்டித்தேன். உடனே சில மணி நேரங்களில் HDFC நிர்வாகத்தைச் சேர்ந்த மற்றொருவர் எனக்கு போன் செய்து நான் ஏன் காட்டமாக பேசினேன் என்று கேட்கிறார். இது போன்ற அழைப்புகள் ஸ்பேம் அழைப்புகள் போல் தெரிகிறது, HDFC இதை பற்றி விசாரிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். தனக்கு வந்த அழைப்புகள் வந்த சில தொலைபேசி எண்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
மேற்படி, அந்த டாக்டர் கூறியதாவது, "இன்று, என்னை அழைத்த ஒருவரை நான் கடிந்து கொண்டேன், அதனால் எச்டிஎஃப்சியின் மேலாளர் என்று சொன்ன மற்றொரு நபர் நான் ஏன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறேன் என்று கேட்க என்னை அழைத்தார். இதை உடனே HDFC சரிபார்த்து விசாரிக்க வேண்டும்.
டாக்டர் சங்கரனின் ட்வீட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் தங்களுக்கும் இதே போன்ற பல ஸ்பேம் கால் வருவதாகவும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியை பலரும் விமர்சித்ததால், சுந்தர் என்ற மருத்துவரிடம் வங்கி தரப்பு மன்னிப்பு கேட்டது. HDFC ட்வீட் செய்து, "ஹாய் சுந்தர், நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். அழைப்பவரின் விவரங்கள் மற்றும் அவர்கள் உங்களை அழைத்த நம்பர்களை எங்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்புங்க, நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications