பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வளர்ச்சியும் மக்கள் தொகையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக மின், நீர், கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகள் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, குடிநீர் பயன்பாடு மற்றும் அதை நிர்வகிக்கும் செலவுகள் கடந்த சில வருடங்களில் அதிகரித்து வந்துள்ளன.
இந்த சூழலில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) குடிநீர் கட்டண உயர்வை ஏப்ரல் 10, 2025 முதல் அமல்படுத்த உள்ளது. இது பெங்களூருவில் வசிக்கும் சாமானிய குடிமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டாளர்களை பாதிக்கக்கூடிய முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு முக்கியமாக நீர் பயன்பாட்டின் அடிப்படையில் புதிய ஸ்லாப் முறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பயன்பாட்டுக்கு குறைந்த கட்டணம் மற்றும் அதிக பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படுகிறது.

BWSSB தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், இந்த கட்டண உயர்வு சாமானிய மக்களை அதிகமாக பாதிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் முக்கிய காரணமாக, ஆடம்பரமான நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், நகரில் நிலவும் நீர் நெருக்கடியை சமாளித்தல், மின் மற்றும் செயல்பாட்டு செலவுகளின் அதிகரிப்பை சமநிலை படுத்துதல் மற்றும் பொறுப்பான நீர் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் செலவு 107% மற்றும் செயல்பாட்டு செலவு 122.5% வரை உயர்ந்துள்ளதால், BWSSB தற்போது மாதம் ரூ.80 கோடி வரை நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனை சமாளிக்கவும், நீர் வசதிகளை தொடர்ந்து சிறப்பாக பராமரிக்கவும் இந்த கட்டண உயர்வு அவசியமானதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் குடிநீர் கட்டணம் பல்வேறு பயன்பாட்டு அளவுகளை பொருத்து ஸ்லாப்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகதிற்கு மாதம் 0 முதல் 8,000 லிட்டர் வரை நீர் பயன்படுத்தினால் லிட்டருக்கு 0.15 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். 8,000 லிட்டர் முதல் 25,000 லிட்டர் வரை 0.40 பைசா, 25,000 லிட்டர் முதல் 50,000 லிட்டர் வரை 0.80 பைசா மற்றும் 50,000 லிட்டருக்கு மேல் பயன்படுத்தினால் லிட்டருக்கு 1 பைசா கட்டணம் விதிக்கப்படும். அதேபோல் அதிக குடியிருப்பு கட்டிடங்களுக்கு மாத நீர் பயன்பாடு 0 முதல் 2,00,000 லிட்டர் வரை இருந்தால் லிட்டருக்கு 0.30 பைசா, 2,00,001 லிட்டர் முதல் 5,00,000 லிட்டர் வரை 0.60 பைசா மற்றும் 5,00,001 லிட்டர் முதல் 10,00,000 லிட்டர் வரை 1 பைசா என்ற வகையில் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
வீட்டு பயனர்கள், அதிகபட்சமாக மாதத்திற்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண குடும்பங்களுக்கு இது பெரிய சுமையாக இருக்காது என கூறப்படுகிறது. வணிக உபயோகத்திற்காக அதிக தண்ணீர் பயன்படுத்தும் நிறுவனங்கள் மாதத்திற்கு 50-60 ரூபாய் வரை கூடுதல் செலவினை எதிர்கொள்ள வேண்டும்.
50,000 லிட்டருக்கு மேல் நீர் பயன்படுத்துபவர்கள் அல்லது பங்களா வீடுகள், பெரிய குடியிருப்புகள் ஆகியவற்றில் நீர் நுகர்வை கட்டுப்படுத்தும் விதமாக இந்த கட்டண உயர்வு உள்ளது. இந்த கட்டண உயர்வு வருவாய் குறையை சமன்படுத்த மட்டுமின்றி, நீர் பாவனையில் பொறுப்புணர்வை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் கட்டணத்தில் தானாகவே 3% உயர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட கால வருவாய் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
பெங்களூரு நீர் வழங்கும் வாரியம் (BWSSB) எதிர்காலத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. புதிய நீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதனுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்படும். மழை நீர் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடிநீர் இழப்பை குறைக்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நீர் பாவனையில் பொறுப்புணர்வை உருவாக்கி, எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பெங்களூருவில் குடிநீர் கட்டண உயர்வு என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீர் பயன்பாட்டில் பொறுப்புணர்வை உருவாக்கி, நீர் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களில் அரசு ஆர்வம் காட்டுவதை பார்க்கலாம். எனினும், குடிமக்கள் தங்கள் நீர் பயன்பாட்டை சீர்படுத்தி, நீர் சேமிப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால், இந்த கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பு மிக குறைவாக இருக்கும். அத்துடன் நீர் மேலாண்மை மற்றும் வருங்கால திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தினால், பெங்களூருவில் நீர் நெருக்கடி குறையும் என்று நம்பலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications