பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் லைன் பணிகள் முடிந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும் வேளையில், பெங்களூரு இன்போசிஸ் எலக்ட்ரானிக் சிட்டி கேம்பஸில் உள்ள ஐடி ஊழியர்கள் புதிய இணைப்பு சேவையை பெற உள்ளனர். பெங்களூரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ பாதை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் வேளையில், இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இன்போசிஸ் கேம்பஸுக்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ பிளாசா, கொனப்பன அக்ரஹாரா மெட்ரோ நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் கேம்பஸ்-ல் இருந்து நேரடியாக மெட்ரோ ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். இந்த சேவையை பிரத்தியேகமாக இன்போசிஸ் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பெங்களூர் மஞ்சள் லைன் மெட்ரோ பாதையில் 3 மெட்ரோ ஸ்டேஷனுக்கு அப்பகுதியில் இருக்கும் பெரிய நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூர் கார்ப்பரேஷன் பெரும் தொகையை ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் திரட்டியுள்ளது. இதில் இன்போசிஸ், பயோகான், டெல்டா ஆகியவை அடங்கும், அப்படி கொனப்பன அக்ரஹாரா மெட்ரோ நிலையத்துடன் இன்போசிஸ் பெயர் வைக்கப்பட்டு உள்ளது
இன்போசிஸ் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ பிளாசாவுக்கு Infosys Foundation நிதியளித்துள்ளது, இது ஊழியர்களின் மெட்ரோ சேவையை பாதுகாப்பாக பயன்படுத்த அனுமதிக்கும். மெட்ரோ பிளாசாவில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு தனி நுழைவு இருக்கும், இது அவர்கள் நேரடியாக மெட்ரோ நிலையத்தை அணுக அனுமதிக்கிறது.
இதற்காக கொனப்பன அக்ரஹாரா மெட்ரோ நிலையத்தில் இருந்து இன்போசிஸ் கேம்பஸ்-ல் இருக்கும் பிளாசாவுக்கு இணைக்க 372 மீட்டர் ஃப்ளைஓவர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் ஜாலியாக மெட்ரோ சேவையை பயன்படுத்த முடியும்.
கொனப்பன அக்ரஹாரா மெட்ரோ நிலையம் தினமும் சுமார் 18,000 முதல் 20,000 பயணிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மஞ்சள் லைனில் தினசரி 1.75 முதல் 2 லட்சம் பயணிகளுக்கு இடையில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
மஞ்சள் கோட்டையின் நிறைவு 2025ஆம் ஆண்டின் இன் இரண்டாவது காலாண்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதல் ரயில் 2025 ஜனவரியில் திட்டகர் ரயில் சிஸ்டம்ஸிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஞ்சள் லைன் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் Infosys ஊழியர்கள் மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் பெரிய அளவில் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திரா வரையில் செயல்படும் இந்த மெட்ரோ பாதை மக்களின் பயண நேரத்தை குறைத்து, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
கொனப்பன அக்ரஹாரா மெட்ரோ நிலையம் அமைக்க சுமார் 115 கோடி ரூபாய் தொகையை இன்போசிஸ் கொடுத்துள்ளது. மேலும் இந்த மெட்ரோ நிலையத்தின் பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணிகளை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்யும் பணியையும் இன்போசிஸ் அறக்கட்டளை மேற்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications