பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் நாட்டின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகியவை உள்ளன. நகரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைத் தணிக்க எலக்ட்ரானிக் சிட்டியின் மாடல் நடைமுறை ஒரு தீர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
நகரின் பிற பகுதிகள் தண்ணீர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்க எலக்ட்ரானிக் சிட்டி இயல்பாக உள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி இண்டஸ்ட்ரியல் டவுண்ஷிப் ஆணையம் வழக்கமான பணிகளை செய்து வருகிறது.

சமீபகாலமாக ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பிரச்னை எங்கள் பகுதியில் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. போல்வெல்கள், சேமித்து வைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருடன் இணைந்துபெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் கிடைக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை உற்பத்தி செய்கிறோம்.
நாங்கள் தண்ணீர் பாசிட்டிவ்வாக இருக்கிறோம் என்று இரு அமைப்புகளின் ஆலோசகர் ராம் கூறினார்.
300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வசிக்கும் 902 ஏக்கர் டவுன்ஷிப்பை குடிமை அமைப்பு நிர்வகிக்கிறது. தற்போது, எல்சிட்டா குடிநீர் வழங்கல் துறையிலிருந்து ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் லிட்டர் நீரையும், போர்வெல்களில் இருந்து 0.15 மில்லியன் லிட்டர் தண்ணீரையும் பெறுகிறது.
அதை குழாய்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் மூலம் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கிறது என்று டவுன்ஷிப்பின் இணையதளம் தெரிவிக்கிறது. இது நகரம் முழுவதும் மழைநீர் ரீசார்ஜ் வசதிகளை செயல்படுத்தியுள்ளது, இதன் விளைவாக 476.4 KLD மழைநீர் ரீசார்ஜ் மற்றும் 120 KLD அறுவடை சாத்தியம் ஆகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வெள்ளத்தின் போது, நாங்கள் பாதிக்கப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் எங்கள் வடிகால்களை அடிக்கடி சுத்தம் செய்வோம். இது சம்பந்தமாக நிறுவனங்களுக்கும் நாங்கள் கற்பித்தோம். அவற்றில் பெரும்பாலானவை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன என்று எல்சியா மற்றும் எல்சிட்டா இரண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ராம் கூறினார்.
டவுன்ஷிப், எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் தண்ணீர் பைப்லைனை அமைத்தது. ஆரம்பத்திலிருந்தே கசிவுகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருந்தது. தண்ணீரை வினியோகிக்கும்போது குறைந்த பட்ச விரயம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உதாரணமாக, பல்வேறு இடங்களில், குழாய்களில் பாயும் போது சுமார் 30% -40% தண்ணீர் வீணாகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே நாங்கள் 5% இழப்புடன் தொடங்கினோம், இப்போது அதை 1% ஆகக் குறைத்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் குடிநீர் நுகர்வு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 15 லிட்டருக்கும் குறைவாக உள்ளது என்று உள்கட்டமைப்பு பிராந்திய தலைவர் குருபிரகாஷ் சாஸ்திரி கூறினார். இன்ஃபோசிஸில், ஆரம்பத்தில், இந்தியாவில் உள்ள எங்கள் வளாகங்கள் முழுவதும் நீர் பாதுகாப்பை இயக்க பல நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
தேவையைக் குறைப்பதற்கான குறைந்த பாய்ச்சல் சாதனங்கள், கசிவைக் கண்டறிந்து தடுக்க ஸ்மார்ட் வாட்டர் மீட்டர், கழிவுநீரில் 100% சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மழைநீரைச் சேகரித்து திறம்பட பயன்படுத்த மழைநீர் சேகரிப்பு ஆகியவை அடங்கும் என்றார்.
பரந்து விரிந்து கிடக்கும் நகர் முழுவதும், சாலைகள், வடிகால்கள் மற்றும் நடைபாதைகள் நிலத்தடி நீர் சேகரிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வடிகாலிலும், புள்ளிகளை நோக்கி தண்ணீர் பாய்வதைக் கண்டதும், அறுவடைக் குழிகளைத் தோண்டினோம். இது நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க பங்களித்தது. எங்களால் முடிந்த ஒவ்வொரு தண்ணீரையும் சேமிக்க, எந்த கசிவையும் நாங்கள் அடைத்தோம் என்று ராம் கூறினார்.
பெரிய நிறுவனங்கள் தங்களுடைய சொந்த சுத்திகரிப்பு ஆலைகளை வைத்திருக்கும் அதே வேளையில், எல்சிட்டா அவர்களின் கழிவுநீரை கட்டணத்துக்கு சுத்திகரிப்பதன் மூலம் சிறிய நிறுவனங்களுக்கு உதவுகிறது. டவுன்ஷிப்பில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் மொத்தம் 1925 KLD திறன் கொண்ட பல STPகள் உள்ளன, அவை நாளொன்றுக்கு சுமார் 1600-1800 KLD சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உருவாக்குகின்றன.
ஜப்பானிய ஆட்டோமேஷன் நிறுவனமான FANUC இந்தியா, மழைநீரில் 60-70% சேமிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளது. எங்கள் வடிகால்கள் மேற்பரப்பில் விழும் தண்ணீரில் 10% மட்டுமே வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று FANUC இந்தியாவின் உதவி பொது மேலாளர் வி ஸ்ரீராம் குமார்கூறினார். நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 40,000 லிட்டரைப் பயன்படுத்துகிறது, அதில் எதுவுமே காவிரியில் இருந்தோ அல்லது எல்சிட்டாவில் இருந்தோ அல்ல.
இப்போது, ஒட்டுமொத்தமாக ஒரு நிறுவனமாக வாட்டர் பாசிட்டிவ் ஆக இருக்கிறோம். பெங்களூரு வளாகத்துக்காக, வீட்டு உபயோகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வாங்கவில்லை என்று சொல்லலாம்" என்றார். குமார் எல்சியாவின் தலைவராகவும் உள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications