பெங்களூரின் முக்கிய அடையாளமாகவும், தெற்கு பெங்களூரில் அதிகம் வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தை உருவாக்கக்கூடிய பகுதியாக விளங்கும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதி திகழ்கிறது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி அலுவலகம் வருவோர் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இந்த வழியாக தான் பயணிக்கும். எல்லா நேரங்களிலும் மிகவும் பரபரப்பாகவே இந்த இடம் காணப்படுகிறது.
இந்தநிலையில், வாகன நெரிசலை குறைக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் பாதையில் (Yellow Line) இயக்கப்படவுள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் தமிழக எல்லையான ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஞ்சள் பாதை கட்டுமானப் பணிகள் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்தது. அதாவது கடந்த பத்து மாதங்களுக்கு முன்பே சீனாவிலிருந்து ஓட்டுநர் இல்லாத ரயில் வந்த போதிலும், மெட்ரோ பாதையின் துவக்கம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இதுவரை நிலுவையில் உள்ள மஞ்சள் பாதை, RV சாலை - பொம்மசந்திரா இடையே தொழில்நுட்ப மையமான எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை இணைத்து, மே 2025க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (BMRCL), ரோலிங் ஸ்டாக்(Rolling Stock) பற்றாக்குறையை சந்தித்து வருவதால் மஞ்சள் கோடு சேவையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (BMRCL), 30 நிமிட இடைவெளியில் மூன்று ரயில்களுடன் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும், செயல்பாட்டின் நம்பகத்தன்மையைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் மேலும், ஏப்ரல் மாதத்திற்குள் 3வது ரயில் மற்றும் அதைத் தொடர்ந்து 4வது ரயிலையும் அறிமுகப்படுத்தப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி, பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (BMRCL, மஞ்சள் பாதையில் (பொம்மசந்திரா - RV சாலை) மெதுவான சோதனை ஓட்டங்களைத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரியில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி, சீன நிறுவனமான CRRC Nanjing Puzhen-ன் 2 ரயில்களை ஆய்வு செய்தார். இதையடுத்து இரண்டாவது ரயில் சோதனை ஓட்டம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ரயில்களில், ஒன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது மற்றொன்று அதன் இந்திய கூட்டாளியான Titagarh Rail Systems நிறுவனத்துடன் சேர்ந்து இணைக்கப்பட்டது ஆகும்.
முன்னதாக, மஞ்சள் பாதை, RV சாலையை பொம்மசந்திரா இடையே 19.1 கிலோமீட்டர் நீளத்துடன், தொழில்நுட்ப மையமான எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை இணைத்து, மே 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மார்ச் 4ம் தேதி சட்டமன்றத்தில் துணை முதல்வரும் பெங்களூரு மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.
இதேபோல், பிங்க் பாதை ( 21.2 கிலோமீட்டர், Kalena Agrahara முதல் Nagawara வரை ) நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவக்குமார், "இந்த கோட்டின் 7.5 கிலோமீட்டர் உயர்ந்த பகுதியாக உள்ள Kalena Agrahara (Gottigere) முதல் Tavarekere (Swagath Cross) வரை வரும் டிசம்பர் மாதம் பொதுப் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் மேலும், 13.7 கிலோமீட்டர் நிலத்தடி பகுதியான Dairy Circle முதல் Nagawara வரை 2026 டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில், சீன நிறுவனம் (CRRC Nanjing Puzhen), BMRCL க்கு 216 பெட்டிகளை வழங்க ரூ.1,578 கோடி ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும் இதை 173 வாரங்களில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல், மஞ்சள் பாதையும் ஆரம்பத்தில் கடந்த 2021 டிசம்பரிலேயே இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 2020ல் இந்திய-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை காரணமாக ரயில் பெட்டிகள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் 75 சதவீத உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்தியாளரை அடையாளம் காண்பதில் CRRC நிறுவனம் பெரும் சவால்களை எதிர்கொண்டது. மேலும், COVID-19, வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கைகள், மற்றும் சீனாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகள் போன்ற பல காரணங்களால் ரயில் பெட்டிகள் விநியோகத்தில் தாமதத்தை ஏற்படுத்தின. இறுதியில், ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க CRRC நிறுவனம், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட Titagarh Rail நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications