இந்தியாவின் 2வது பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, ஒவ்வொரு வருடமும் மக்களின் விருப்பமான உணவு, சிறந்த வாடிக்கையாளர், பெரிய ஆர்டர் மதிப்பு, அதிகம் ஆர்டர் செய்தவர் எனப் பல விஷயங்களை தொகுத்து அறிக்கையாக வெளியிடும். இந்த வகையில் இந்த வருடம் Swiggy Wrap 2023 அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியர்களுக்கு பிடித்தமான உணவு பிரியாணி என்றாலும் பிற உணவுகளும் அதிகளவில் ஸ்விக்கி தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்பு மக்களின் செலவு செய்யும் பழக்கத்தை சிறப்பான முறையில் ஆய்வு செய்யும் வாய்ப்புகள் அனைத்து நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த குடும்பம் செய்துள்ளதை பாருங்க.

ஜான்சி நகரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் ஒரே நாளில் சுமார் 269 உணவு பொருட்களை ஆர்டர் செய்து வியக்க வைத்துள்ளது. வீட்டில் பெரிய பார்ட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். இதேபோல் புவனேஷ்வர் நகரில் ஒரு வீட்டில் சுமார் 207 பீட்சா ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது, பலரும் வியந்துள்ளனர்.
மேலும் இந்தியாவின் டெக் நகரம் என பெயரை பெற்றுள்ள பெங்களூர்-க்கு ஸ்விக்கி கேக் நகரம் எனவும் பெயரிடப்பட உள்ளது. பெங்களூரில் மட்டும் சுமார் 85 லட்சம் சாக்லேட் கேக் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெங்களூர் மக்கள் சாக்லேட் உணவுகள் மீதி அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் கணிக்க முடியும்.
இதேபோல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் இந்திய மக்கள் ஒரு நிமிடத்திற்கு சுமார் 271 கேக்-ஐ ஆர்டர் செய்து அசத்தியுள்ளனர்.
இதேபோல் துர்கா பூஜா தினத்தில் சுமார் 77 லட்சம் குலாப் ஜாமுன் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மசாலா தோசையும் ஸ்விக்கி தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications