இந்தியாவின் முக்கிய 9 பெரு நகரங்களில் ஜனவரி முதல் மார்ச் 2026 வரையிலான காலாண்டில் வீடுகளின் விற்பனை 1 லட்சத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் சந்தையும் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. ஈரான் போர் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் கட்டுமான செலவுகள் அதிகமாகியிருக்கும் வேளையில், தற்போது சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதில் செலவுகள் அதிகரிக்கும். இது ஏற்கனவே விற்பனை குறைந்துள்ள இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் பாதிப்பாகும்.
இந்த நிலையில் இக்காலாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 98,761 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது கடந்த 4.5 ஆண்டுகளில் (18 காலாண்டுகளில்) முதல் முறையாக ஏற்பட்டுள்ள சரிவாகும். நீண்ட காலமாக வளர்ச்சியில் இருந்த ரியல் எஸ்டேட் சந்தை இப்போது மந்தமாகி வருவதை PropEquity நிறுவனத்தின் ரிப்போர்ட் தெளிவாகக் காட்டுகிறது.

விற்பனை எவ்வளவு சரிந்தது?
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீடு விற்பனை சுமார் 13 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் உண்மையில் பிரச்னை வேறு இடத்தில் உள்ளது.
புதிய வீட்டுத் திட்டங்கள் ஏன் குறைந்தன?
வீடு விற்பனை மட்டுமின்றி, புதிதாக சந்தைக்கு வரும் வீட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது புதிய திட்டங்கள் 19 சதவீதம் குறைந்துள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 92,411 புதிய வீடுகள் மட்டுமே இக்காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலைக்கு முக்கிய காரணம் விநியோகக் குறைபாடு (supply constraint) ஆகும். அதாவது, கட்டுமான நிறுவனங்கள் (பில்டர்கள்) புதிய திட்டங்களை அதிக அளவில் தொடங்கவில்லை. இதனால் வீடு வாங்குபவர்களுக்கு மத்தியிலான தேர்வு செய்யும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
இதேவேளையில் சந்தையில் புதிய வீடுகள் இல்லாமல் இருப்பதால் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் பட்ஜெட் வீடுகளின் அறிமுகமும் பெரிய அளவில் குறைந்து, ஆடம்பர வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் மக்களிடம் வீடு வாங்கும் ஆர்வம் இல்லாதது மட்டும் முழுமையான காரணம் அல்ல, புதிய வீடுகள் குறைவாக இருப்பதும், விலை அதிகரித்திருப்பதும் முக்கியப் பிரச்னையாக உள்ளது.
எந்த நகரங்கள் சிறப்பாகச் செயல்பட்டன?
மொத்த 9 பெரு நகர சந்தைகளில் மந்தநிலையில் இருந்தாலும் சில நகரங்கள் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இப்படி பார்த்தால் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
இக்காலாண்டில் பெங்களூரில் சுமார் 17,991 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 16 சதவீதமும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதமும் அதிகமாகும். பெங்களூரில் தேவை இன்னும் வலுவாக இருப்பதை இது காட்டுகிறது.
இதை தொடர்ந்து டெல்லி-என்சிஆர் பகுதியில் 12,141 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு.
மற்ற நகரங்கள் சரிவில்
பெங்களூர், டெல்லி-என்சிஆர் பகுதியை தாண்டி நாட்டின் மற்ற அனைத்து நகரங்களில் விற்பனை குறைந்துள்ளது. புனேயில் 25 சதவீதம், தானேயில் 24 சதவீதம், மும்பையில் 20 சதவீதம், ஹைதராபாத்தில் 16 சதவீதம், நவி மும்பையில் 14 சதவீதம், கொல்கத்தாவில் 8 சதவீதம் மற்றும் சென்னையில் 4 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதிலும் பெரும்பாலான நகரங்கள் இரட்டை இலக்க சரிவைச் சந்தித்துள்ளன. டெல்லி-என்சிஆரில் மட்டும் புதிய திட்டங்கள் 89 சதவீதம் அதிகரித்துள்ளன. சென்னையில் புதிய திட்டங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 62 சதவீதம் குறைந்துள்ளன.
ரியல் எஸ்டேட் சந்தை
இந்திய ரியல் எஸ்டேட் சந்தை எப்போதும் இல்லாமல் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை கவனமாகத் தொடங்கி வருகின்றன. இதனால் வீடு வாங்குபவர்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. கோவிட் பெரும்தொற்றுக்குப் பிறகு வலுவான வளர்ச்சியைக் கண்ட ரியல் எஸ்டேட் சந்தை இப்போது மந்தமான கட்டத்திற்கு சென்றுள்ளது.
இந்த மந்தநிலை தற்காலிகமானது என்றே பார்க்கப்படுகிறது. கட்டுமான நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் புதிய திட்டங்களைத் தொடங்கினால் விற்பனை மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏஐ தாக்கும் மூலம்
டெக் துறையில் நிலவும் பணிநீக்கம் நாட்டின் முக்கியமான நகரங்களில் மக்கள் சொந்த வீட்டை வாங்க தயங்கி வருகின்றனர்.
ஒருப்பக்கம் ஆடம்பர வீடுகளின் அறிமுகம் அதிகரிப்பு, கட்டுமான செலவுகளை அதிகரிப்பு என காரணத்தால் வீடுகளின் அடிப்படை விலையே தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் சொந்த வீடு வாங்குவது குறைந்து வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications