வெந்த பெங்களூரு.. நொந்த மக்கள்..!! இரவு முழுவதும் ஓடும் ஏசி..!!

டெக் நகரம், ஸ்டார்ட்அப் நகரம் என பல பெயர் கொண்டு இருக்கும் பெங்களூர்-க்கு வேறு சில பெயர்களும் உள்ளது. கார்டன் சிட்டி, கான்கிரிட் காடுகள் மத்தியில் கார்டன் எங்கே போய் தேடுவது என சமீப காலமாக கார்டன் சிட்டி பெயரையும் இழந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் பற்றி இந்தியா முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒரு விஷயம் சில்லென்ற கிளைமேட். ஒரு காலத்தில் "ஏர் கண்டிஷன்" நகரமாக அறியப்பட்ட பெங்களூர் இப்போது வெந்த பெங்களூரில் மனம் நொந்து மக்கள் புலம்பி வருகின்றனர்.

 வெந்த பெங்களூரு.. நொந்த மக்கள்..!! இரவு முழுவதும் ஓடும் ஏசி..!!

பெங்களூர் நகரம் இந்த ஆண்டு கடுமையான வெயிலைச் சந்தித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் மின்சார தேவையையும் அதிகரித்துள்ளது, குறிப்பாக ஏசி பயன்பாடு காரணமாக மின்சார பயன்பாடு இரவில் அதிகரித்துள்ளது என BESCOM தரவுகள் கூறுகிறது.

மின்சார தேவை அதிகரிப்பு: பெங்களூர் மின்சார விநியோக நிறுவனமான (Bescom) தகவலின்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின்சார தேவை உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இரவு நேரங்களில் அதிகரித்து வரும் ஏர் கண்டிஷனர்கள் பயன்பாடு கருதப்படுகிறது.

வாடகை ஏசி: இந்த சூழ்நிலையில் பெங்களூரில் வாடகை ஏசி வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. Rentomojo, Cityfurnish, Furlenco போன்ற ஸ்டார்ட்-அப் வாடகைக்கு ஏசி வழங்குகின்றன. தற்போது பெங்களூரில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் 3 நிறுவன தளத்திலும் OUT OF STOCK நிலவுகிறது.

மின்சார பயன்பாடு: ஏப்ரல் 2023 இல், Bescom எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உச்ச மின்சார தேவை மற்றும் நுகர்வு 7,800 மெகாவாட் ஆக இருந்தது. இது ஏப்ரல் 2024 இல் 8,381 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மார்ச் 2023 இல் உச்ச நுகர்வு 7,740 மெகாவாட் ஆக இருந்தது, அது மார்ச் 2024 இல் 8,232 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

இலவச மின்சாரம்: கர்நாடக அரசின் "க்ரூஹ ஜோதி திட்டத்தின்" கீழ், மாதம் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், மின் நுகர்வு 200 யூனிட்டை தாண்டினால், மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

கருணைக்குக் கூட மழை இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடைசியாகக் கணிசமான மழைப்பதிவை 2023 நவம்பரில் (சுமார் 106.6 மிமீ) பதிவு செய்தது. அதற்குப் பிறகு, குறிப்பிடத்தக்க மழைப்பதிவு இல்லை. டிசம்பர் 2023 இல் 0.7 மிமீ, ஜனவரி 2024 இல் 2 மிமீ, ஃ பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 2024 மாதங்களில் மழை இல்லை.

ஆனால் மே மாதம் 2ஆம் தேதி பெங்களூரில் 5 மாதங்களுக்குப் பிறகு பரவலான இடத்தில் மழை பெய்து மக்களை ஆனந்தக் கண்ணீர் வரவழைத்துள்ளது.

எதிர்காலம் கவலைக்குரியது: தொடரும் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மின்சார தேவை ஆகியவை பெங்களூருவின் எதிர்காலத்திற்குக் கவலை அளிக்கின்றன. மின்சார சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+