இந்தியாவை விட்டு இரவோடு இரவாக வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா-ஐ வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு போராடி வரும் வேளையில், சமீபத்தில் அவருடைய பாட்காஸ்ட் வீடியோ மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
எப்போதும் மீடியாவுக்கு பேட்டிக்கொடுக்காத விஜய் மல்லையா பிரபல யூடியூபரும், தொழில்முனைவோருமான ராஜ் ஷமானி-யின் பாட்காஸ்ட்-ல் கலந்துக்கொண்டார். சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த உரையாடலில் விஜய் மல்லையா பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சில விஷயங்கள் அதிர்ச்சி அளித்தாலும், பல விஷயங்கள் புது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாட்காஸ்டில் விஜய் மல்லையா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சில முக்கிய நிகழ்வுகளையும் பகிர்ந்துக்கொண்டார். பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் மாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பென்ட்ஹவுஸ் குறித்து பகிர்ந்தார்.
பெங்களூரின் அடையாளமாக இருக்கும் கட்டிடத்தின் மேல் பிரம்மாண்ட ஆடம்பர வீடு உள்ளது. இது கிங்பிஷர் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமானது. இந்த வீடு எப்படி, எதற்காக கட்டப்பட்டது, தற்போது இதன் நிலைமை என்ன என்பது குறித்து விஜய் மல்லையாவே பேசியுள்ளார்.
கிங்ஃபிஷர் டவர்ஸ், கப்பன் பூங்கா மற்றும் சின்னசாமி மைதானத்தை ஒட்டி உள்ளதால் இது பெங்களூரில் மிகவும் காஸ்ட்லியான பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு தான் விஜய் மல்லையா குழந்தையாக இருந்த போது வாழ்ந்து வந்தார். மல்லையாவின் குடும்ப பங்களா இருந்த இடத்தில் தான் தற்போது கிங்ஃபிஷர் டவர்ஸ் உள்ளது. மல்லையா குடும்ப பங்களா ஏன் இடிக்கப்பட்டது, எப்படி வீட்டின் மொட்டை மாடியில் ஆடம்பர வீடு கட்டப்பட்டது என அவரே இந்த பாட்காஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

பிரஸ்டீஜ் குழுமத்தின் தலைவர் இர்ஃபான் ரசாக், மல்லையாவின் குடும்ப பங்களா இருந்த நிலத்தை ஒரு ஆடம்பர குடியிருப்பு திட்டமாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தார். அப்போது விஜய் மல்லையா "நான் நகைச்சுவையாக, என் பங்களாவை கட்டிடத்தின் மேல் வைத்தால், நான் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வேன் என்றேன். சற்றும் யோசிக்காமல் ரசாக் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒப்புக்கொண்டார்," என மல்லையா இந்த பாட்காஸ்டில் தெரிவித்தார். இதனால், அந்த மல்லையாவின் குடும்ப பங்களா பென்ட்ஹவுஸாக மாறியது.
மல்லையாவின் குடும்ப பங்களா-வை போலவே கிங்பிஷர் டவர்ஸ் மீது ஒரு பங்களா இருக்கும். இந்த பங்களாவின் வடிவம், பழைய வீட்டை போலவே கட்டியுள்ளது பிரஸ்டீஜ் குழுமம். கிங்ஃபிஷர் டவர்ஸ் திட்டம், பெங்களூருவின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடம். இந்த இடத்தை பயன்படுத்தி நிறுவனத்தின் வணிக வளர்ச்சிக்கு நிதி திரட்டும் பொருட்டு விஜய் மல்லையா ஒப்புக்கொண்டார்.

ஆனால் இந்த பிரம்மாண்ட பென்ட்ஹவுஸ் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் விஜய் மல்லையா இதை பயன்படுத்தாமலேயே யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் திவால் நடவடிக்கைகளில் சிக்கியது. "சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் இந்த சொத்து மீட்டெடுக்கப்படும்," என விஜய் மல்லையா கூறினார். இந்த சட்டப் பிரச்சனைகளை தீர்க்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கிங்ஃபிஷர் டவர்ஸ்-ல் மல்லையாவின் பென்ட்ஹவுஸ் தவிர, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் ஜீரோதாவின் நிகில் காமத் போன்ற பிரபலங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications