பெங்களூரில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மசால் தோசைக்கும், இட்லிக்கும், நெய் பொடி தோசைக்கும் அடிமையாக்கியிருக்கும் ராமேஸ்வரம் கஃபே 4 வருடத்திற்கு முன்பு பெங்களூரில் சிறிய அளவில் துவங்கி இன்று இந்நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர்கள் தற்போது மிகப்பெரிய விரிவாக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபே தற்போது பெங்களூரிலும், ஹைதராபாத்தில் மட்டுமே இயங்கி வரும் வேளையில் விரைவில் மும்பை, புனே, டெல்லி மற்றும் குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலத்திலும் கால் பதிக்கவும், வேகமாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.

இண்டர்நெட் வாயிலாகவும், மக்களின் வாயிலாகவும் குறுகிய காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே, அடுத்தடுத்து வளர்ச்சி திட்டத்தை வகுப்பது மட்டும் அல்லாமல் தனது பிராண்டு டிரெண்டிங் ஆக இருக்கும் போதே புதிய உச்சத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
பெங்களூர் இந்திரா நகரில் புதிய கிளையைத் திறந்தபோது, ராமேஸ்வரம் கஃபே இணை நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திவ்யா ராகவேந்திர ராவ் தனது மாபெரும் விரிவாக்கத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்த புதிய கிளை இந்திரா நகர் பகுதியின் மிகவும் பிரபலமான 100 அடி சாலையில் அமைந்துள்ளது. 400 பேர் அமரக்கூடிய இடவசதியுடன் விரிவாக்கப்பட்ட மெனுவைக் கொண்டுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே வட இந்தியாவில் விரிவாக்கம் செய்வதோடு, ஹைதராபாத்தில் தனது கடை எண்ணிக்கையும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் ஹைதராபாத்தில் ஒன்று அல்லது இரண்டு புதிய கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளையில் கேரளா அல்லது தமிழ்நாடு சந்தைகளில் நுழைய எந்தத் திட்டமும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதோடு நிற்காமல் ராமேஸ்வரம் கஃபே எல்லைகளை கடந்து அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் துபாயில் தனது முதல் சர்வதேச கிளையைத் திறக்க தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ராமேஸ்வரம் கஃபே பிராண்டின் மதிப்பு புதிய உச்சத்தை தொட உள்ளது. இது ராமேஸ்வரம் கஃபே வளர்ச்சி பாதையில் முக்கிய திருப்பமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் கஃபே தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிளையைத் திறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications