பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தேவனஹள்ளி பகுதியில், Foxconn நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேவனஹள்ளி பகுதி விவசாயிகள் கூறுகையில், நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், வேளாண்மை நிலம் தங்களது வாழ்வாதாரம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் மிகப்பெரிய அளவிலான உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் பாக்ஸ்கான், சமீபத்தில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்யத் தென்னிந்தியாவில் பல மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாபெரும் தொழிற்சாலையை சுமார் 300 ஏக்கர் நிலத்தில் அமைக்க முடிவு செய்தது.
இந்த நிலையில் தற்போது தேவனஹள்ளி பகுதி விவசாயிகள் பாக்ஸ்கான் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கான காரணம் குறித்து ஸ்ரீநிவாஸ் என்ற விவசாயி, ஒரு பத்திரிக்கையிடம் கூறுகையில், "கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (KIADB) அல்லது Foxconn நிறுவனத்திடம் இருந்து இதுவரை ஒரு பைசா கூட பெறவில்லை. ஆனால், எங்கள் நிலத்தை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துகின்றனர். இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
KIADB தலைமை செயல் அதிகாரி எம்.மகேஷ், நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மற்றும் காவல்துறையின் உதவியுடன், டொட்டகோல்லஹள்ளி மற்றும் சப்பரடஹள்ளி கிராமங்களில் Foxconn நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான வேலிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
"தேவனஹள்ளி தாலுகாவின் குண்டனஹள்ளி கிராமத்தில் Foxconn நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 300 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
"தேவனஹள்ளி மூன்றாவது கூடுதல் மூத்த சிவில் நீதிபதி மற்றும் JMFC இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு நேரடியாக வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு ஆணை பிறப்பித்து. இதனால் இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்படும்" என்று அவர் விளக்கம் அளித்தார்.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, கர்நாடக மாநில பெரு மற்றும் நடுத்தர தொழில்துறை துறை அமைச்சர் எம். பி.பாட்டில் அக்டோபர் 2023 மற்றும் ஜனவரி 2024ல் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சில முக்கிய கூட்டங்களை நடத்தினார்.ஆயினும், இதுவரை இப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
ஹான் ஹாய் பிரிசிஷன் இண்டஸ்ட்ரி (Foxconn) நிறுவனம் மே 2023 இல் ரூ.300 கோடி (US $37 மில்லியன்) செலவில் இந்த நிலத்தை வாங்கியது. இதன் மூலம் தேவனஹள்ளி தாலுகாவில் தொழில்துறை பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
Foxconn நிறுவனம் இந்த உற்பத்தி ஆலைக்காக சுமார் ரூ.8,500 கோடி முதலீட்டை 3 கட்டங்களாகச் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications