பெங்களூருவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரையே வெள்ளம் சூழ்ந்தது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்கள் வந்துள்ளதாகவும் இன்னும் அதிக க்ளைம்கள் வர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு வெள்ளம்
பெங்களூர் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, பெரு வெள்ளம் அந்நகர மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நிலையில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மக்கள் சேதமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட தங்கள் உடைமைகளுக்கான க்ளைம்களை விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்
செப்டம்பர் 5 முதல் மூன்று நாட்கள் பெய்த கனமழையால் பெங்களூரு நகரில் உள்ள ஐடி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கோடீஸ்வர்களின் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. சொகுசு கார்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால் சில கோடீஸ்வரர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து லாட்ஜில் தங்கும் நிலை ஏற்பட்டது.
இன்சூரன்ஸ் க்ளைம்கள்
இந்த நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளை மதிப்பீடு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பல க்ளைம்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தாக்கல் செய்யப்படுவதாகவும், காப்பீட்டு நிறுவனங்களும் சேதமான கார்கள் உள்பட வாகனங்களின் மதிப்பீடுகள் செய்யும் பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இறுதி மதிப்பீடு
இதுவரை தாக்கல் செய்த க்ளைம்களின் இறுதி மதிப்பீடு அடுத்த இரண்டு வாரங்களில் தெரியவரும் என்று கூறினாலும், பல நிறுவனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான க்ளைம்களை கையாள்வதாக கூறியூள்ளன.
ரூ.100 மில்லியன்
BMW, Mercedes மற்றும் Audis போன்ற விலை உயர்ந்த வாகனங்களின் க்ளைம்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன. செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பெங்களூரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் இழப்பு ரூ.100 மில்லியனை தாண்டியுள்ளதாகவும், இது இன்னும் அதிகரிக்கும் என்றும் ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் இதுகுறித்து கூறியபோது, 'வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு பின் இதுவரை 200க்கும் மேற்பட்ட க்ளைம்களை பெற்றுள்ளதாகவும், அதில் சுமார் 20% வாகனங்களின் சேத க்ளைம்கள் என்றும் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியபோது சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள க்ளைம்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நெருக்கடி
பெங்களூரு வெள்ளம் காரணமாக கோடிக்கணக்கில் காப்பீடு க்ளைம்கள் வந்து கொண்டிருப்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications