உலகின் முன்னணி கான்டிராக்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், தனது உற்பத்தி தளத்தை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் கர்நாடக தேர்தல் நாள் அறிக்கும் முன்பில் இருந்து பெங்களூரில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
இன்று காலை முதல் கர்நாடகாவில் வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வரும் வேளையில் மே 9 ஆம் தேதி தைவான் நாட்டின் பாக்ஸ்கான் சிறப்பான சம்பவம் செய்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் புதிய தொழிற்சாலையை அமைப்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசும், பாக்ஸ்கான் நிறுவனமும் அறிவித்திருந்தது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநிலத்தின் உயர்மட்ட கிளியரன்ஸ் கமிட்டி மார்ச் 22 ஆம் தேதி சுமார் 8000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் கிரீன்பீல்ட் தொழிற்சாலை திட்டத்தை ஒப்புதலுக்காக ஆய்வு செய்யும் பணிகளை துவங்கியது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக அளித்துள்ளதாக ஏபர்ல் மாத இறுதியில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பாக்ஸ்கான் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும். அதற்கான நிலத்தை வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை லண்டன் பங்குச்சந்தையில் வெளியிட்ட அறிக்கையின் படி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 1.2 மில்லியன் சதுர மீட்டர் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட 298 ஏக்கர் நிலம், இதற்காக பாக்ஸ்கானின் தாய் நிறுவனமான Hon Hai Technology சுமார் 37 மில்லியன் டாலர் அதாவது 300 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிராம்மாண்ட தொழிற்சாலைக்கு கர்நாடக தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது போல், தேர்தல் நாளான மே 10 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்பு நிலம் வாங்கியது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான மொத்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் சுமார் 30 சதவீதத்தை இந்தியாவில் தயாரிக்கும் இலக்கில் பாக்ஸ்கான் முக்கிய பங்கு வகிக்கிறது. பாக்ஸ்கான் இந்திய தேவைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications