கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அம்மாநிலத்தின் உயர்மட்ட அனுமதிக் குழு (SHLCC), டிசம்பர் 12ஆம் தேதி நடந்திய கூட்டத்தில் Foxconn நிறுவனம் கூடுதலாக 13,911 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை சென்னையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம், கடந்த 3 வருடத்தில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்யவும், ஸ்மார்ட்போன் தாண்டி பிற பொருட்களை தயாரிக்கவும் திட்டமிட்டு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் முதலீடு செய்ய துவங்கியது.

இதில் முக்கியமாக கர்நாடகாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான HON HAI Precision நிறுவனம் பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் 8500 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் உற்பத்தி தளத்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கு மத்தியில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் 13,911 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் எம்பி பாட்டீல் கூறுகையில், அரசு ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.8,000 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 13,911 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான பாக்ஸ்கான் அனுமதி கோரிய நிலையில் SHLCC ஒப்புதல் அளித்ததுள்ளது என விளக்கம் கொடுத்தார்.
பெங்களூர் நகரின் தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள தொட்டபல்லாப்பூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப முதலீட்டு பகுதி (ஐடிஐஆர்) என்ற தொழில்துறை பகுதியில் உற்பத்தி தளத்தை அமைக்கும் பணிக்காக இந்த கூடுதல் முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் மே மாதம் Hon Hai Precision (Foxconn) தேவனஹள்ளி பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கியது குறிப்பிட்தக்கது.
கர்நாடக மாநில அரசின் 62வது SHLCC கூட்டத்தில் அம்மாநிலம் முழுவதும் 13,308 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் ரூ.34,115 கோடி மதிப்பிலான 14 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் எம்பி பாட்டீல் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications