இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் எனப்படும் GCC அலுவலகங்கள் அதிகமாக இருக்கும் முன்னணி நகரமாகப் பெங்களூர் இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் பங்கு சற்று குறைந்து, அதன் ஆதிக்கம் குறையத் துவங்கியுள்ளது. 2018-19 இல் இந்திய அளவில் பெங்களூரின் GCC அலுவலகங்களின் பங்கீடு 33.8% இருந்த நிலையில் 2023-24 இல் 29.4% ஆக குறைந்துள்ளது.
பெங்களூரில் GCC அலுவலகங்களின் எண்ணிக்கை 2018-19 இல் 620-லிருந்து 2023-24 இல் 875 ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் GCC அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை 62.5% அதிகரித்து, 1,830-லிருந்து 2,975 ஆக உயர்ந்துள்ளது.

சிறிய நகரங்கள் GCC-கள்: இந்தியாவில் முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டும் தான் GCC அலுவலகங்கள் அமைக்கப்படும், ஆனால் தற்போது GCC எகோசிஸ்டத்தில் பல காரணங்களால் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து Nasscom அமைப்பின் தலைமை மூலோபாய அதிகாரியான சங்கீதா குப்தா கூறுகையில் பெங்களூரு ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான முன்னணி நிறுவனங்களின் GCC அலுவலகங்கள் கொண்டிருப்பதால் தொடர்ந்து இப்பிரிவில் ஆதிக்கம் செய்து வருகிறது என்று கூறுகிறார்.
ஆனால் தற்போது ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களும், புதிய நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தும்போது, செலவுகளைக் குறைக்கச் சிறிய நகரங்களில் அதாவது இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் அலுவலகங்களை நிறுவ விரும்புகிறது.
Zinnov-Nasscom இணையத்தில் வெளியிட்ட இந்தியா ஜிசிசி லேண்ட்ஸ்கேப் என்ற தலைப்பிலான அறிக்கையில், GCC நிறுவனங்கள் தற்போது நாட்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் அலுவலகங்களை நிறுவுவதை முன்னிலைப்படுத்துகிறது. நாட்டின் மொத்த ஜிசிசி பங்கீட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களின் பங்கீடு 7% ஆக உள்ளன, 2019 இல் 5% இருந்தது.
பெங்களூரின் பங்கு குறைந்தாலும், NCR மற்றும் ஹைதராபாத் அதிகப்படியான ஜிசிசி அலுவலகங்களை ஈர்த்து வருகிறது. NCR-ன் ஜிசிசி அலுவலக பங்கீடு 2018-19 இல் 15.5சதவீதத்தில் இருந்து 2023-24 இல் 15.6% ஆக அதிகரித்துள்ளது. புனேவும் சிறிய உயர்வை அடைந்துள்ளது, 11.4சதவீதத்தில் இருந்து 12.1% ஆக உயர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் பெங்களூரின் நெருங்கிய போட்டியாளராக இருந்த ஹைதராபாத், தனது பங்கீட்டை 12% அளவில் தொடர்ந்து பராமரித்து வருகிறது. மும்பை 11.7சதவீதத்தில் இருந்து 12.2% ஆகவும், சென்னை 9.8சதவீதத்தில் இருந்து 10.2% ஆகவும் உயர்ந்துள்ளது.
பெரு நகரங்கள் அனைத்தும் கடந்த 5 வருடத்தில் சிறிய அளவிலேயே உயர்ந்துள்ளது, ஆனால் மொத்த வளர்ச்சியும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் பதிவாகியுள்ளது என்பது தான் இதன் அடிநாதம். சிறு நகரங்களில் GCC நிறுவனங்களின் முதலீடுகளின் அளவு குறைவாக இருந்தாலும், எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

தப்பித்த பெங்களூர்.. சிக்கிய சென்னை.. படுத்தேவிட்டது ரியல் எஸ்டேட்..!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications